ஜமைக்கா ஒலிம்பிக் அணியில் உசேன் போல்ட் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தசைப் பிடிப்பு காரணமாக தற்போது ஜெர்மனியில் சிகிச்சை பெற்று வரும் அவர் விரைவில் குணமடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒலிம்பிக்கில் 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்று உலக சாதனைக்கு சொந்தக்காரரான உசேன் போல்ட் அண்மை காலமாக தசைப்பிடிப்பால் அவதிப்பட்டு வருகிறார். ரியோ ஒலிம்பிக்கிற்கு பிறகு, தடகளத்தில் இருந்து ஓய்வு பெறவும் முடிவு செய்திருந்தார் . ரியோவுக்காக முழுமூச்சாக தயாராகி வந்த நிலையில், தசைப்பிடிப்பு காரணமாக போல்ட்டால், பயிற்சியில் ஈடுபட முடியாமல் போனது. தற்போது ஜெர்மனியில் சிறப்பு சிகிச்சையில் போல்ட் இருக்கிறார்.
ஜுலை 22ம் தேதி, லண்டன் அனிசவர்சரி தடகளத்தில் பங்கேற்று ரியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெறுவேன் என்று போல்ட் அறிவித்திருந்தார். இதுதான் ஒலிம்பிக் போட்டிக்கு முன்னதாக நடைபெறவுள்ள கடைசி தகுதி சுற்று போட்டி ஆகும். இதற்கிடையே ஜமைக்கா அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் உசேன் போல்ட்டின் பெயரும் இடம் பெற்றுள்ளது.
ரியோ ஒலிம்பிக் போட்டியில், உசேன் போல்ட்டின் போட்டியாளராகக் கருதப்படும் அமெரிக்க வீரர் ஜஸ்டின் காட்லீன், போல்ட் குணமாகி ஒலிம்பிக்கில் பங்கேற்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார் இந்த ஆண்டு நடந்த தடகள போட்டிகளில் 100 மீட்டரை ஜஸ்டின் காட்லீன் 9.40 வினாடிகளில் கடந்துள்ளார். உசேன் போல்ட் உள்ளிட்ட வேறு எந்த தடகள வீரரும் 100 மீட்டர் ஓட்டத்தை இந்த வேகத்தில் கடக்கவில்லை. அதனால் ஒலிம்பிக்கில் போல்ட் பங்கேற்றால் அவருக்குக் கடும் சவால் காத்திருக்கிறது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.