Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 17, 2016

'எங்களைக் காப்பாற்றுங்கள்'-துருக்கியில் தவிக்கும் தமிழக வீராங்கனைகள் கோரிக்கை!


ராணுவப் புரட்சி நடந்துள்ள துருக்கியில், 11 தமிழர்கள் உள்பட 200 இந்தியர்கள் சிக்கி தவிக்கின்றனர். அங்கிருந்து 'எங்களை இந்திய அரசு மீட்க வேண்டும்' என்று துருக்கியிலிருந்து தமிழக வீராங்கனைகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

உலக பள்ளி தடகள சாம்பியன்ஷிப் போட்டி துருக்கியில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் இந்தியா சார்பில் 200 பேர் பங்கேற்றுள்ளனர். இதில் தமிழகத்தை சேர்ந்த அஜித்குமார், தமிழ்ச்செல்வி, பிரியதர்ஷினி உள்பட 11 பேரும் அடக்கம். இந்த நிலையில், துருக்கில் நேற்று ராணுவப் புரட்சி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ராணுவத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய 60 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அங்காரா பகுதியில் இருந்து 800 கிலோ மீட்டர் தொலைவில் டிராப்சோன் நகரில் இந்திய வீரர், வீராங்கனைகள் தங்கியுள்ளனர். அங்காராவில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. ஆனால், டிராப்சோன் பகுதியில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இருந்தாலும் எங்களை மீட்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வீரர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.



துருக்கியில் தவிக்கும், தமிழகத்தை சேர்ந்த வீராங்கனைகள் தமிழ்ச்செல்வி, பிரிதர்ஷினி கூறுகையில், "துருக்கியில் ஏற்பட்டுள்ள ராணுவ புரட்சியால் வீரர், வீராங்கனைகள் வெளியே எங்கும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. டிராப்சோனில் உள்ள விளையாட்டு கிராமத்தில் நாங்கள் தங்க வைக்கப்பட்டுள்ளோம். உங்கள் பகுதியில் பாதிப்பு இல்லையென்றாலும் அங்காராவில் பதற்றம் நிலவி வருகிறது. எங்களை மத்திய அரசு பத்திரமாக மீட்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

இதனிடையே, சென்னை ராயபுரத்தை சேர்ந்த வீராங்களை தமிழ்ச்செல்வியின் தந்தை வெங்கடேஷ், "எனது மகளை மீட்க மத்திய, மாநில அரசுகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.