மக்கள் பாதுகாப்பு கழக தலைவரும் சமூக ஆர்வலருமான டிராபிக் ராமசாமி, மதுரையில் விதிகளை மீறி இயக்கப்படும் ஆட்டோக்களைப் பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டார்.
டிராபிக் ராமசாமி தனது சொந்த வேலையாக மதுரை வந்தார். போக்குவரத்துப் பாதிப்பு குறித்துப் பொதுமக்கள் அவரிடம் மனு அளித்ததின் பெயரில், போக்குவரத்து போலீஸார் உதவியுடன், பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள டி.பி.கே சாலையில் திடீர் நடவடிக்கையில் ஈடுபட்டார்.
விதிகளை மீறி செயல்பட்ட 10 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. மேலும் சம்பவ இடத்திற்கு வந்த டிராபிக் ஏ.சி. திருமலை, பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு கூட்டத்தைக் கலைத்தார்.
இதுகுறித்து டிராபிக் ராமசாமி கூறுகையில், ''சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில்தான் அதிக அளவில் விதிகளை மீறி ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன . கடந்த வருடம் மதுரையில் 26 ஆயிரமாக இருந்த ஆட்டோக்களின் எண்ணிக்கை, தற்போது உயர்ந்து 32 ஆயிரமாக மாறியுள்ளன. இதில் அதிகாரிகள் தெரிந்தே பர்மிட் வழங்குகின்றனர். இதனால் பல விபத்துகள் அரங்கேறுகின்றன. இதனைக் கட்டுப்படுத்த வேண்டும். இது குறித்த தகவல் சேகரித்துள்ளேன். மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்குத் தொடர உள்ளேன்'' என்றார்.
அதே சமயம் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள், ''இது எங்களுக்கு வாழ்வாதார பிரச்சனை என்பதால், கால அவகாசம் அளிக்கவேண்டும்'' என்று வேண்டுகோள் விடுத்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.