Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 29, 2016

பேன் தொல்லையை போக்கும் இயற்கை வழி


சிலருக்கு தலையில் பேன் அதிகமாக இருக்கும். ஒரு கூட்டத்தில் ஒருவரது தலையில் பேன் இருந்தாலும், அது மற்றொருவருக்கு மிகவும் வேகமாக பரவக்கூடும். ஆரம்பத்திலேயே பேன் தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்காவிட்டால், பின் பேனைப் போக்குவது என்பது சிரமமாகிவிடும். பேன் தொல்லைக்கு கடையில் எத்தனையோ நிவாரணிகள் விற்கப்படுகிறது. அவற்றில் சில விலை அதிகமாகவும், கெமிக்கல் உள்ளதாகவும் இருக்கும்.

ஆனால் நீங்கள் இயற்கை முறையில் பேன் தொல்லையில் இருந்து விடுபட நினைத்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள முறையைப் பின்பற்றுங்கள்.

தேவையான பொருட்கள்:

லிஸ்டரின் மௌத் வாஷ் (lister mouthwash)
வெள்ளை வினிகர் (White vinegar)
பேன் சீப்பு
ஷவர் கேப் அல்லது பிளாஸ்டிக் பைடவல்

செய்யும் முறை:

* முதலில் தலைமுடியை நீரில் அலசிக் கொள்ள வேண்டும். பின் மௌத் வாஷ் கொண்டு அலசி, ஷவர் கேப் அல்லது பிளாஸ்டிக் பை கொண்டு தலையை சுற்றிக் கொள்ள வேண்டும்.

* 1 மணிநேரம் கழித்து, தலையில் சுற்றியுள்ளதை கழற்றி விட்டு, பின் வெள்ளை வினிகர் கொண்டு தலைமுடியை அலசி, மீண்டும் ஷவர் கேப் அல்லது பிளாஸ்டிக் பை கொண்டு தலையை சுற்றிக் கொள்ள வேண்டும்.

* பின் 1 மணிநேரம் ஆன பின், தலையில் உள்ளதைக் கழற்றி, ஷாம்பு பயன்படுத்தி தலையை நன்கு அலச வேண்டும்.

* இறுதியில் பேன் சீப்பு கொண்டு தலையை சீவினால், தலையில் இருந்த பேன் இறந்து உதிர்வதை நன்கு காணலாம்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.