Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 5, 2016

ஏம்ப்பா.. "லூசாப்பா" நீ.. ??


தனது மகள் போட்டிருந்த செல்பி படங்களைப் பார்த்த அவரது தந்தை அவரைப் போலவே தானும் போஸ் கொடுத்து போட்டுள்ள செல்பியால் சமூக வலைதளங்களில் பரபரப்பாகியுள்ளது. தந்தையும், மகளும் போட்டிருந்த செல்பி படங்கள் தற்போது வைரல் ஆகியுள்ளன.

அந்தத் தந்தையின் பெயர் கிறிஸ் மார்ட்டின். இவரது 19 வயது மகள் காஸி மார்ட்டின். இவர் சற்றே செக்ஸியாக செல்பி படங்களை எடுத்துப் போட்டிருந்தார். இதைப் பார்த்த அவரது தந்தை கிறிஸ் மார்ட்டின் எடுத்தார் செல்போனை, தனது மகளைப் போலவே போஸ் கொடுத்து அவரும் எடுத்தார் செல்பிகளை. இந்த செல்பிகளை அவரும் சமூக வலைதளத்தில் போட்டார்.

இவர்கள் இருவரின் செல்பிகளும் தற்போது வைரல் ஆகியுள்ளன. தனது மகள் எப்படியெல்லாம் போஸ் கொடுத்தாரோ அதே போல இவரும் போஸ் கொடுத்து அசத்தியுள்ளதுதான் சுவாரஸ்யமானது.

இதுகுறித்து காஸி கூறுகையில், எனது தோழிகள் சிலர் இதைப் பார்த்து என்னிடம் சொன்னார்கள். அவர்களுக்கு இந்தப் படம் பிடித்துள்ளது என்றார் சிரித்தபடி. மேலும் அவர் கூறுகையில் எனது அப்பா ஒரு காமெடியான தந்தை என்றும் புன்னகைத்தார்.

சரி உங்க படத்தைப் பார்த்து மகள் அடக்கமாக மாறுவார் என்று நம்புகிறீர்களா என்று மார்ட்டினிடம் கேட்டால், நிச்சயம் மாற மாட்டார். இன்னும் ஒரு படி மேலே போனாலும் போவார். அதுதான் எனக்குக் கவலையாக இருக்கிறது என்று கூறிச் சிரிக்கிறார்.

பேசாம தமிழ்நாட்டுக்கு வந்து ஒரு மாசம் தங்கிட்டுப் போங்களேன்..!

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.