தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் அருமையான வளர்ச்சியை புருவத்திற்கு அளிக்கும். விட்டமின் ஈ போஷாக்கினை கொடுத்து, புருவ வளர்ச்சியை தூண்டச் செய்கிறது. இப்படி மூன்றுமே ஒரு கலவையாக உங்கள் புருவத்தில் செயல் புரிந்து, எப்படி புருவ வளர்ச்சியை தராமல் போகும். எப்படி செய்வது இந்த எண்ணெய் சீரத்தை என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
தேங்காய் எண்ணெய் - 1 டீ ஸ்பூன்
விட்டமின் ஈ ஆயில் - அரை டீஸ்பூன்
விளக்கெண்ணெய் - 1 டீஸ்பூன்
மஸ்காரா பிரஷ் - 1
மேலே சொன்ன எண்ணெய்கள் எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து ஒரு பாட்டிலின் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். மஸ்காரா பிரஷில் அந்த எண்ணெயை குழைத்து, பிரஷ்ஷினால், புருவத்தில் பூசுங்கள். தினமும் இரவில் பூசி வாருங்கள். இந்த எண்ணெயை இமைகளுக்கும் பூசலாம். நீங்கள் பிரஷினால் தீட்டும் அதே வாகில் முடி வளர்ந்து, புருவம் அடர்த்தியாய் காண்பிக்கும். ஒரு மாதத்தில் அழகான புருவம் கொண்ட பெண்ணாக நீங்கள் இருப்பது உறுதி.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.