லண்டன்: இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக தெரசா மே நேற்று இரவு பதவி ஏற்று கொண்டார்.
இங்கிலாந்து நாட்டில், சமீபத்தில் நடந்த ஐரோப்பிய யூனியனில் நீடிக்கலாமா? வேண்டாமா? என்ற வாக்கெடுப்பில் பிரதமர் டேவிட் கேமரூன் கருத்துக்கு எதிராக விலக வேண்டும் என்ற கருத்து வெற்றி பெற்றது. இதனால் டேவிட் கேமரூன், பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இதனையடுத்து பிரதமர் பதவிக்கான போட்டியில் இங்கிலாந்து எரிசக்தி அமைச்சர் ஆண்டிரியா லீட்சம், உள்துறை அமைச்சர் தெரசா மே ஆகிய 2 பேர் இருந்தனர். இதில் ஆண்டிரியா லீட்சம் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து, தெரசா மே இங்கிலாந்தின் அடுத்த பிரதமராக தேர்வு செய்யப்படுவது உறுதியானது.
இந்நிலையில், பிரதமர் டேவிட் கேமரூன் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட ராணி எலிசபெத், புதிய பிரதமராக தெரசா மேவை நியமித்தார். அதையடுத்து, தெரசா மே நேற்று இரவு இங்கிலாந்தின் புதிய பிரதமராக பதவி ஏற்று கொண்டார். 59 வயதான தெரசா மே இங்கிலாந்தின் 2-வது பெண் பிரதமர் ஆவார். இதற்கு முன்பு மார்க்கரெட் தாட்சர் முதல் பிரதமர் என்ற பெருமையை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.