Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 17, 2016

சென்னையில் முதல் முறையாக சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்!


தமிழகத்தில் முதல் முறையாக, சுரங்கப் பாதையில் சென்னை கோயம்பேடு முதல் ஷெனாய் நகர் வரையிலான சுரங்க வழித்தடத்தில் மெட்ரோ ரயிலை இயக்கி மெட்ரோ ரயில் அதிகாரிகள் ஆய்வு நடத்தி உள்ளனர்.
ஒரு ரயில் பெட்டியுடன் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு, கோயம்பேட்டில் இருந்து திருமங்கலம், அண்ணாநகர், ரவுண்டானா வழியாக ஷெனாய் நகருக்கு மெட்ரோ ரயிலை அதிகாரிகள் இயக்கி ஆய்வு நடத்தினர்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டம் அமைக்கப்பட்டு வந்தது.
இதில், முதல் கட்டமாக கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரயிலுக்கான பாதைகள் போடப்பட்டு, இந்த வழித்தடத்தில் கடந்த ஆண்டு ஜூன் 29 ம் தேதி முதல் மெட்ரோ ரயில் சேவை தொடங்கியது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.