கடந்த 40 வருடங்களாக சுமார் 45,000 ஸ்வீடன் மக்களிடம் நடந்து முடிந்த ஆராய்ச்சியில், அவர்களின் பருவ வயதில் தொடங்கி, இப்போது வரை ஆய்வு செய்ததில், உடல் பருமான பதின்ம வயதினர் பின் வந்த காலங்களில் தீவிர கல்லீரல் நோய்களினாலும். கல்லீரல் புற்று நோயாலும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கின்றது. அதோடு, கொழுப்பு கல்லீரல் நோய்களாலும், ஹெபடைடிஸ் பி மற்றும் ஏ நோயாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது ஸ்வீடன் என்று இல்லாமல் உலக அளவில் உடல் பருமனாக இருப்பவர்களுக்கும் பொருந்தும் என்று கூறுகிறார்கள் இந்த ஆய்வை நடத்திய ஆராய்ச்சியாளர்கள்.
40 வருடங்களுக்கு முன் இருந்ததை விட இப்போது உடல் பருமனாக இருப்பவர்களின் எண்ணிக்கை இரு மடங்காகிவிட்டது. இதனால் கல்லீரல் தொடர்பான கொடிய நோய்கள் பல மடங்கு பெருக வாய்ப்புள்ளது என்று கவலையாக தெரிவித்தார் ஆராய்ச்சியாளர் ஹேக்ஸ்ட்ரோம்.
மது மற்றும் புகையிலை காரணமாக வரும் கல்லீரல் நோய்களைப் போலவே, சமமாக உடல் பருமனாலும், கல்லீரல் நோய்கள் வரும் என்று ஹெபடாலஜி என்னும் மருத்துவ இதழ் எச்சரிக்கின்றது.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.