Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 16, 2016

மாணவர்களின் வீடுகளுக்கே சென்று எழுப்பிவிடும் ஆசிரியர்கள்


சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில், பள்ளி மாணவர்களை, அவர்களின் வீடுகளுக்கே சென்று ஆசிரியர்கள் எழுப்பிவிடும் வித்தியாசமான முயற்சி நடைபெற்று வருகிறது.

கரியாபாண்ட் மாவட்டத்தில் உள்ள இந்த கிராமத்தின் தலைமை ஆசிரியரும், பிற ஆசிரியர்களும் தினமும் அதிகாலை 4 மணி முதல் தெரு தெருவாகச் சென்று விசில் அடித்து மாணவர்களை எழுப்பி விடுகின்றனர்.

விசில் ஒலியைக் கேட்டு மாணவர்கள் எழும்பி விரைவாகத் தயாராகி பள்ளிக்குச் சென்று பாடங்கள் படிக்கின்றனர்.

இந்த வித்தியாசமான முயற்சியின் காரணமாக, இப்பள்ளி மாணவர்கள் நல்ல முறையில் கல்வியில் முன்னேறி வருவதாகக் கூறப்படுகிறது. ஆசிரியர்களின் இந்த முயற்சி தங்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்து வருவதாக மாணவர்களும் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.