திண்டுக்கல் அருகே உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் யாரும் இல்லாததால் தலைமை ஆசிரியர் வகுப்பறையில் குறட்டை விட்டு தூங்கிய சம்பவம் நடந்துள்ளது.
திண்டுக்கல் அருகே ஒட்டன்சத்திரம் ஒன்றியம் ஆலயக்கவுண்டன்பட்டியில் 1989ம் ஆண்டு முதல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்படுகிறது. இங்கு 2 மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர் . ஆனால் அவர்களும் சமீப காலமாக பள்ளிக்கு வருவது இல்லை. இந்த பள்ளியில் ஒரு தலைமை ஆசிரியர், ஒரு உதவி ஆசிரியர் உள்ளனர். உதவி ஆசிரியர் அயற்பணியில் வேறு பள்ளிக்கு சென்றுவிட்டார். தலைமை ஆசிரியர் ராமராஜ் மட்டுமே உள்ளார்.
இதற்கிடையில் நேற்று பகல் 12 மணிக்கு பள்ளியில், 2 வகுப்பறைகளில் ஒன்று பூட்டப்பட்டு இருந்தது. மற்றொரு வகுப்பறையில் உள்தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. உள்ளே தலைமை ஆசிரியர் ராமராஜ் தூங்கிக்கொண்டிருந்தார். இதனை யாரோ ஒருவர் தனது மொபைலில் படம் எடுத்து பரப்பி விட்டார்.
இதுகுறித்து உதவி தொடக்க கல்வி அலுவலர் முருகேசனிடம் கேட்டபோது,
பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க முயற்சி எடுத்து வருகிறோம் . 2 பேர் மட்டுமே படிப்பதால், 2 ஆசிரியர்களில் ஒருவர் வேறு பள்ளிக்கு அனுப்பப்பட்டுள்ளார். மாற்று ஆசிரியர் இல்லாததால் தலைமை ஆசிரியர் மதிய உணவுக்கு சென்றபோது பள்ளி பூட்டப்பட்டிருக்கலாம் என்று சமாளித்தாராம்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.