தினமும் கொலை, கொள்ளை என பேப்பரில் செய்தி படித்துவிட்டு, தமிழகத்தை திட்டிக் கொண்டிருக்கிறோம். ஆனால் தமிழகம்தான், இந்தியாவிலேயே வெளிநாட்டவர்களும், உள்நாட்டவர்களும் அதிகம் விரும்பும் மாநிலமாக உள்ளது. தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்த பட்டியலில் தமிழகம் 2வது இடத்தை பிடித்துள்ளது.
கடந்த ஆண்டில் மட்டும் 46 லட்சம் சுற்றுலாப்பயணிகள் தமிழகத்துக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ளனர். இது கடந்த 2014 ம் ஆண்டை விட 2 லட்சம் அதிகம் ஆகும். அடுத்ததாக மகாராஷ்ட்ராவுக்கு 41 லட்சம் பேர் சென்றுள்ளனர். தாஜ்மகால் அமைந்துள்ள உத்தரபிரதேசத்துக்கு 31 லட்சத்து 10 ஆயிரம் பேர்தான் சென்றுள்ளனர்.
தலைநகர் டெல்லிக்கு 23 லட்சம் பேர் விசிட் செய்துள்ளனர். மேற்கு வங்கத்துக்கு 14 லட்சம் பேர் சென்றுள்ளனராம். இதில் விசித்திரம் என்னவென்றால் கடவுளின் தேசம் எனப்படும் சுற்றுலாத் தலங்கள் நிறைந்துள்ள கேரளத்துக்கு 10 லட்சம் பேர்தான் விசிட் அடித்துள்ளனர். கோவாவுக்கு 5 லட்சம் பேர் சுற்றுலா மேற்கொண்டுள்ளனர்.
அதுமட்டுமல்ல, உள்நாட்டு சுற்றுலாப்பயணிகள் பட்டியலிலும் தமிழத்துக்குதான் முதலிடம். கடந்த 2015ம் ஆண்டு மட்டும் 3 கோடியே 33 லட்சம் இந்தியர்கள், தமிழகத்துக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ளளனர். இவர்களை அதிக கவரும் இடமாக மாமல்லபுரம், தஞ்சை பெரியக் கோயில், கங்கை கொண்ட சோழபுரம், உதகை, வேளாங்கண்ணி ஆகியவை அமைந்துள்ளன.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.