சென்னை பெருநகர காவல்துறையினரின் ரோந்து பணியினை மேம்படுத்தும் வகையில், 100 இருசக்கர வாகனங்களையும், 250 மிதிவண்டிகளையும் வழங்கி முதலமைச்சர் ஜெயலலிதா, இன்று தலைமைச் செயலகத்தில் ரோந்துப் பணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இதுதொடர்பாக இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “மாநிலத்தின் அமைதியைப் பேணிப் பாதுகாப்பது, சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பது, குற்றங்கள் நிகழாமல் தடுப்பது, குற்றவாளிகளைக் கண்டுபிடித்து தக்க தண்டனை பெற்றுக் கொடுப்பது போன்ற பல்வேறு முக்கிய பணிகளை காவல்துறை ஆற்றி வருகின்றது.
சென்னை பெருநகர காவல்துறையின் ரோந்துப் பணியினை மேம்படுத்தவும், மக்கள் நெருக்கம் நிறைந்த பகுதிகளிலும், குறுகலான தெருக்களிலும் ரோந்து பணியினை தீவிரப்படுத்தும் வகையிலும், ஜிபிஎஸ் கருவிகள், மின்னணு அறிவிப்பு பலகைகள், தொலை தொடர்பு கருவிகள் போன்ற நவீன உபகரணங்கள் பொருத்தப்பட்ட நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் ஏற்கெனவே வழங்கியுள்ளதன் காரணமாக சென்னை பெருநகர காவல்துறையினர் ரோந்துப் பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வருகிறார்கள்.
சென்னை பெருநகர காவல்துறையினரின் ரோந்து பணியினை மேலும் மேம்படுத்தும் வகையில் 1 கோடியே 12 லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்பட்ட 100 இருசக்கர வாகனங்களையும், 250 மிதிவண்டிகளையும் இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.
இந்த ரோந்து பணியில் ஈடுபடும் சென்னை பெருநகர காவல்துறையின் ரோந்து காவலர்களுக்கு, தனிப்பட்ட முறையில் வடிவமைக்கப்பட்ட மேல்சட்டை, தலைக்கவசம் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. இருசக்கர வாகனங்களிலும், மிதிவண்டிகளிலும் ஒலி எழுப்பான்கள், எல்இடி விளக்குகள் உள்ளிட்ட கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் ரோந்து காவலர்கள் குறுகிய தெருக்களிலும், மக்கள் நெருக்கடி உள்ள பகுதிகளிலும் ரோந்து பணிகளை மேற்கொள்ள இயலும்.
போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்படும் உடனடி அபராதங்களுக்கு மின்னணு ரசீது வழங்கும் முறையினை மேலும் நவீனப்படுத்தும் வகையில், சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினரின் பயன்பாட்டிற்காக, 1 கோடி ரூபாய் செலவில் வாங்கப்பட்ட 100 உயர் ரக மின்னணு ரசீது கருவிகளை வழங்கும் அடையாளமாக 5 போக்குவரத்து காவலர்களுக்கு ஜெயலலிதா உயர்ரக மின்னணு ரசீது கருவிகளை வழங்கினார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.