Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 15, 2016

மணிக்கு 180 கி.மீ செல்லும் ’டால்கோ ரயில்’ - இந்தியாவில் அறிமுகம்


இந்தியாவிலேயே முதன் முறையாக மணிக்கு 180 கி.மீ செல்லும் டால்கோ ரயில் விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

ஸ்பெயின் நாட்டில் தயாரிக்கப்பட்ட டால்கோ விரைவு ரயிலின் முதற்கட்ட சோதனை ஓட்டம் கடந்த மாதம் பரேலி - மொரதாபாத் இடையே நடந்தது. அப்போது அந்த ரயில் 80 முதல் 115 கி.மீ வேகத்தில் இயக்கி சோதிக்கப்பட்டது. கடந்த 9ம் தேதி இரண்டாம் கட்ட சோதனை ஓட்டம் மதுரா - பல்வால் இடையே நடந்தது. 120 கி.மீ வேகத்தில் ரயில் இயக்கப்பட்டது. மொத்தம் 84 கி.மீ தூரத்தை 53 நிமிடங்களில் ரயில் கடந்தது.

இந்நிலையில் 3ஆம் கட்ட சோதனை, நேற்று அதன் முழு வேகமான மணிக்கு 180 கி.மீ வேகம் வரை இயக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அப்போது மதுரா-பால்வால் இடையே உள்ள 84 கி.மீ. தொலைவை வெறும் 38 நிமிடங்களில் டால்கோ கடந்து சாதனை படைத்தது.

இந்த சோதனை ஓட்டத்தின் போது 9 பெட்டிகள் டால்கோ ரயிலில் இணைக்கப்பட்டிருந்தன. இந்த ரயில் பெட்டிகள் குறைந்த எடை கொண்டதாகவும், வளைவுகளின் போது வேகத்தை குறைக்காமல் திருப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இதன் அடுத்த கட்ட சோதனை டெல்லி - மும்பை இடையிலான 1,400 கிமீ தூரத்துக்கு இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.