சுவாதி கொலை வழக்கில் ராம்குமார் மற்றும் சுவாதியின் செல்போன்கள் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி வருகின்றன. சுவாதியை ராம்குமார் தான் கொலை செய்தார் என காவல்துறை கூறி வருகிறது. ஆனால் இந்த வழக்கு ராம்குமாரையும் தாண்டி விரிவடைந்து அவரின் பின்னணியில் இருந்து இந்த கொலையை அரங்கேற்றியவர்கள் யார் என்பதை விசாரிக்க வேண்டும் என பல தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
காவல்துறை விசாரணையில் சென்னைக்கு வேலை தேடிவந்ததாக கூறியிருந்தார் ராம்குமார். ஆனால் அவருடைய செல்போன் அலைவரிசையை ஆராய்ந்ததில் ஏப்ரல் மாதத்தில் சென்னை வந்த ராம்குமார் வேறு எங்கும் வேலைக்குப் போகவில்லை. அந்த மாதம் ராம்குமாரின் செல்போன் அலைவரிசை நுங்கம்பாக்கத்தையே காட்டுகிறது.
மே மாதத்தில் பல நாட்கள் மேன்சனைச் சுற்றியுள்ள பகுதிகளை வலம் வந்திருக்கிறார் ராம்குமார். மேலும் மே மாதம் 20 மற்றும் 21-ஆம் தேதிகளில் ராம்குமார் ஆந்திரா சென்று வந்திருக்கிறார். இது இந்த வழக்கில் பலத்த சந்தேகங்களை ஏற்படுத்திருக்கிறது.
ஆந்திரா சென்ற ராம்குமார் அங்கு யாரை சந்தித்தார்? ஆந்திரா சென்றதற்கான நோக்கம் என்ன. அந்த இரண்டு நாட்களும் ராம்குமாரின் செல்போன் ஆந்திரா டவரையே காட்டுகிறது. ஆந்திராவில் ராம்குமாருக்கு உறவினர்கள் யாரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாதி கொலை வழக்கில் பெங்களூரு மனிதர்கள் தொடர்பு இருக்கலாம் என பல சந்தேகங்கள் வரும் சூழலில் ராம்குமார் ஆந்திராவிற்கு சென்றது புதிய திருப்பங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.