Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 10, 2016

சென்னை அருகே கடலில் தத்தளிக்கும் கப்பல் கடலில் பயணிக்க உகந்ததல்ல: அதிகாரிகளுக்கு மாலுமிகள் கடிதம்


சென்னை அருகே கடலில் தத்தளிக்கும் கப்பலின் எஞ்சின் மற்றும் அவசர தேவைக்கு பயன்படும் உபகரணங்கள் பழுதாகியுள்ளதாக மாலுமிகள் எழுதிய கடிதம் புதிய தலைமுறைக்கு கிடைத்துள்ளது.

அதில், கடலில் பயணிக்க உகந்த நிலையில் கப்பல் இல்லை என அதிகாரிகளுக்கு மாலுமிகள் கடிதம் எழுதியுள்ளனர். மேலும், கப்பலின் எஞ்ஜின் பழுதானதுடன், அவசர தேவைக்கு பயன்படும் உபகரணங்கள் பயன்படுத்த முடியாத சூழலில் இருப்பதாக கடல்சார் வாணிபத்துறைக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டதற்கு, கப்பல் விவகாரத்தில் முறையான நடவடிக்கைகளை பின்பற்றுவதாகவும், கப்பலுக்கு உரிய பாதுகாப்பு அளித்துள்ளதாகவும் கூறியுள்ளன‌ர். கப்பலின் எஞ்சினை சரி செய்ய 4 பொறியாளர்கள் கொண்ட குழு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். கடந்த சனிக்கிழமை சென்னையிலிருந்து துருக்கிக்குச் சென்ற கப்பலின் எஞ்ஜின் பழுதானதால், சென்னையிலிருந்து எட்டு கடல் மைல் தூரத்தில் கடலில் நிற்கிறது கப்பல்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.