Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 1, 2016

கடத்தப்பட்ட இந்தியச் சிறுவன் 6 ஆண்டுகளுக்குப் பிறகு பெற்றோருடன் இணைந்தார்


புதுடெல்லியிலிருந்து 6 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட 12 வயது சிறுவன், வங்கதேசத்திலிருந்து இன்று (வியாழன்) தாய்நாடு திரும்பி பெற்றோருடன் சேர்ந்துள்ளார்.

சோனு என்று அழைக்கப்படும் இந்தச் சிறுவன் டெல்லி விமான நிலையத்தில் பாதுகாப்புகளுடன் தனது தந்தையின் கைகளைப் பிடித்தபடி வந்து சேர்ந்துள்ளார்.

தந்தை மெஹ்பூப் கூறும்போது, “நான் எனது மகனைத் திரும்பப் பெற்றேன். வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

கடத்தலின் முழு விவரம் தெரியவில்லை, ஆனால் சோனுவின் பெற்றோருக்குச் சொந்தமான வீட்டில் வாடகைக்குக் குடியிருந்த ஒருவர் சோனுவை 2010-ம் ஆண்டு கடத்தி பிறகு அவரை வங்கதேசத்துக்கு ஆள்கடத்தல் செய்துள்ளார்.

தென்மேற்கு ஜெசூரில் வீட்டுப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு சுரண்டப்பட்ட சிறுவன் பற்றி வங்கதேசத்தைச் சேர்ந்த மெக்கானிக் ஒருவர் இந்திய அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தார்.

அங்கு வீட்டுப் பணிகளில் ஈடுபட்டிருந்த போது சோனுவை துன்புறுத்தியதும் தெரிய வந்துள்ளது. பிறகு இவரை மீட்டு அங்கு குழந்தைகள் நலக்காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.

செவ்வாயன்று சுஷ்மா ஸ்வராஜ் கூறிய போது, சோனுவின் டி.என்.ஏ. மாதிரிகள் தாயாரின் டி.என்.ஏ-வுடன் ஒத்துப் போனது என்றார்.

சுஷ்மா ஸ்வராஜ், புன்னகைக்கும் சோனுவுக்கு ஆறுதல் வழங்கும் புகைப்படங்களும், சுஷ்மா ஸ்வராஜின் பாதத்தைத் தொட்டு சோனுவின் தாயார் வணங்குவதுமான படங்களும் வெளியாகியுள்ளன.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.