Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 9, 2016

மினி ஸ்டோரி! எனக்குக் கடவுளைக் காட்டு!


ரோமச் சக்கரவர்த்தி ஹட்ரியன், யூத மத குருவான ஐõஷ்வா என்பவரை அழைத்து, ""நான் கடவுளைக் காண விரும்புகிறேன். அவரை எனக்குக் காட்டுங்கள்,'' என்று கூறினார்.
""அது முடியாத ஒரு காரியம். அவரைப் பார்ப்பது கூடாது,'' என்று யூத மத குரு ஜாஷ்வா கூறினார்.
சக்கரவர்த்தி மீண்டும் மீண்டும் ரபியை அலைக்கழித்து, ""நான் அவரைப் பார்த்தே ஆக வேண்டும்,'' என வற்புறுத்தினார்.
அது ஒரு கோடைகாலமாக இருந்தது. சக்கரவர்த்தியை வெளியே கூட்டிக்கொண்டு போய், ""சரி அண்ணாந்து சூரியனைப் பாருங்கள்,'' என்றார் ரபி.
சக்கரவர்த்தி, ""தன்னால் முடியாது. அது கஷ்டமான காரியம்,'' என்றார்.
ரபி சக்கரவர்த்தியைப் திரும்பிப் பார்த்து, ""சூரியன் இறைவனால் உருவாக்கப்பட்டது. அதனுடைய தேஜஸை உம்மால் பார்க்க முடியவில்லை. அப்படியிருக்க இறைவனைக் காணுவது உம்மால் எப்படி முடியும்?'' என்றார்.
உண்மையை உணர்ந்த சக்கரவர்த்தி அமைதியானார். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.