Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 15, 2016

லண்டனில் கெளரவமிக்க விருதை வென்ற சென்னையின் 'வேதனை' புகைப்படம்!


அது ஒரு வேதனை தரும் புகைப்படம் தான். ஆனால் அத்தனை தத்ரூபமாக எடுக்கப்பட்டிருந்தது. சென்னை மக்களுக்கு கடல் அரிப்பு ஒரு வேதனை தரும் விஷயம். தினம் தினம் கடலுக்குள் செல்லும் வீடுகள். ஒவ்வொரு முறையும் வீடுகளை இழக்கும் மீனவர்களின் வாழ்க்கை போராட்டத்தை அந்த புகைப்படம் அத்தனை அழகாக விளக்கியிருந்தது. சாந்குமார் என்ற பத்திரிகை புகைப்பட கலைஞர்தான் இந்த புகைப்படத்தை எடுத்தவர்.



தற்போது இந்த புகைப்படத்திற்கு லண்டனை சேர்ந்த  'அட்கீன்ஸ்' சுற்றுச்சூழல் விருதும் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு புகைப்பட கலைஞருக்கும் இந்த விருது ஒரு பெரும் கனவு. கிட்டத்தட்ட போட்டோகிராபியின் உச்சத்தைத் தொடுவது போன்ற உணர்வைத் தரும் விருது இது. சாந்குமார் விருதை வென்றதையடுத்து, இந்த ஆண்டுக்கான அட்கீன்ஸ் சுற்றுச்சூழலியல்  புகைப்பட  விருதை இந்திய புகைப்பட கலைஞர் எல். சாந்குமார் பெறுகிறார்  சென்னை நகரின் கடல் அரிப்பை  அற்புதமான முறையில் பதிவு செய்ததற்காக அவருக்கு இந்த விருது  வழங்கப்பட்டுள்ளது என 'தி கார்டியன்' செய்தி வெளியிட்டிருந்தது.

இதையடுத்து ஒரே நாளில் சாந்குமாரும் அவரது புகைப்படமும் பாப்புலராகி விட்டது. ஆஸ்கர் விருதை வென்ற லியார்னடோ டி காப்ரியோ கூட அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம்  பக்கத்தில் ஷேர் செய்ய சாந்குமார் தன்னைத்தானே கிள்ளிப்பார்த்துக் கொண்டார்.  கெளரவமிக்க விருதை வென்ற சாந்த் குமார் கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்தவர். சென்னை ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் நீண்ட காலம் பணியாற்றி வந்தவர் தற்போது மும்பையில் பணியாற்றி வருகிறார்.

இந்த விருது வென்றதையடுத்து  சாந்தகுமாருக்கு ஒரு ஆண்டு இங்கிலாந்தில் வசிக்க   குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.  ஒரு வருட காலம் இங்கிலாந்தில் தங்கியிருந்து அட்கீன்ஸ் சுற்றுச் சூழல் அமைப்பு சார்பாக நடத்தப்படும் அனைத்து நிகழ்வுகளையும் புகைப்படமாக பதிவு செய்து தரும் சிறப்பு பணியில் அவர் ஈடுபட வேண்டும். அனைத்து ஏற்பாடுகளையும் அந்த நிறுவனமே செய்து தரும்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.