ஆன்டிகுவா டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெறும் நிலையில் இருக்கிறது. மேற்கிந்திய தீவுகள் அணி தொடர்ந்து திணறி வருகிறது.
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஆன்டிகுவாவில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட் செய்த இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 566 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. கேப்டன் விராட் கோலி இரட்டை சதமும், அஸ்வின் சதமும் அடித்து அசத்தினர். 2-வது நாள் ஆட்ட முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி,1 விக்கெட் இழப்பிற்கு 31 ரன்கள் எடுத்திருந்தது. மூன்றாவது நாள் ஆட்டத்தில், மதிய உணவு இடைவேளைவரை வெஸ்ட் இண்டீஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் எடுத்திருந்தது. பிராத்வைட் 46 ரன்களுடனும், சாமுவேல்ஸ் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.
உணவு இடைவேளைக்கு பின்னர், இந்திய பந்து வீச்சாளர்கள் முகமது சமியும் உமேஷ் யாதவும் அருமையாக பந்து வீசினர். இதனால் மேற்கிந்திய தீவுகள் அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. தாக்குப்பிடித்து ஆடிக்கொண்டிருந்த பிரைத்வைட் 74 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதிக் கட்டத்தில் களமிறங்கி நிதானமாக விளையாடிய டவுரிச் 57 ரன்களுக்கும், ஹோல்டர் 36 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இறுதியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 243 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஃபாலோ ஆன் ஆனது.
இந்திய தரப்பில் முகமது சமி, உமேஷ் யாதவ் தலா 4 விக்கெட்டுக்களை சாய்த்தனர். மிஸ்ரா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். 323 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை மேற்கிந்தியத் தீவுகள் அணி தொடங்கியது. 3-ம் நாள் ஆட்ட முடிவில் அந்த அணி 13 ஓவர்களில் 21 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்திருந்தது.முதல் இன்னிங்சில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிராத்வைட் 2 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். சந்திரிகா 9, டேரன் பிராவோ 10 ரன்களில் களத்தில் உள்ளனர்.
தற்போது மேற்கிந்தியத் தீவுகள் அணி 302 ரன்கள் பின்தங்கியுள்ளது. இன்னும் இரு நாட்கள் ஆட்டம் எஞ்சியுள்ளதால், இந்திய அணியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுவிட்டது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.