சென்னையை அடுத்த தாம்பரம் விமானப்படைத் தளத்தில் இருந்து ஏ.என் 32 ரக சரக்கு விமானம் போர்ட் பிளேருக்கு புறப்பட்டு சென்றது. புறப்பட்ட 16 நிமிடங்களில் வங்காள விரிகுடா மீது பறந்து கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. விமானத்தில் 6 ஊழியர்கள், 15 வீரர்கள், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 8 கட்டுமானப் பணியாளர்கள் இருந்தனர். தமிழகத்தை சேர்ந்த ஒரு வீரரும் அந்தக் குழுவில் இருந்தார். விமானம் கடலில் விழுந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. விமானம் காணாமல் போனதையடுத்து, அதனைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விமானத்தை தேடும் பணியில் 20 கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
விமானம் காணாமல் போனதையடுத்து பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் உள்ள ஐ.என்.எஸ். ராஜாளி விமானப்படை தளத்துக்கு நேற்று வந்தார். விமானத்தை கண்டுபிடிப்பது குறித்து விமானப்படை, கடற்படை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர், அவர் ‘பி-81’ ரக கடற்படை ரோந்து விமானத்தில் சென்று விமானத்தை தேடும் பணியையும் பார்வையிட்டார். எந்த வித தடையும் இன்றி விமானத்தை தேடும் பணியை தொடருமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் மனோகர் பாரிக்கர் உத்தரவிட்டார். விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் அருப் ராஹா, விமானப்படை பணியாளர் தலைவர் வைஸ் அட்மிரல் எச்.சி.எஸ். பிஷ்த் உள்ளிட்டோரும் பாதுகாப்புத்துறை மந்திரியுடன் சேர்ந்து தேடும் பணியை பார்வையிட்டனர்.
விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள விமானங்கள், கப்பல்கள்
இந்திய விமானப்படையின் சென்சார்கள் பொருத்தப்பட்ட சி-130 ரக விமானங்கள் இரண்டு தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்திய கடற்படைக்குரிய, செயற்கை இடைக்கண் ரேடார்கள் பொருத்தப்பட்ட ‘பி-81’ ரக விமானம், டார்னியர் ரக விமானங்கள், இந்திய கடற்படையின் 13 போர்க்கப்பல்கள், இந்திய கடலோர காவல்படை கப்பல்கள், வணிகக்கப்பல்கள் 6, இந்திய கடலோர காவல்படையின் நீர்மூழ்கிக்கப்பல் ஆகிய அடக்கம்.
விமானம் மாயமாகி 36 மணி நேரம் ஆகிவிட்டது. இதுவரை என்ன ஆனது என்று தெரியவில்லை. விமானம் கடலில் விழுந்தால் அதன் சிதறிய பாகங்கள் கடலில் மிதக்கும். அல்லது எண்ணெய் படலம் தெரியும். ஆனால், நேற்று மாலை வரை சிதறிய பாகங்கள் எதுவும் கடலில் தென்படவில்லை. எண்ணெய் படலமும் காணப்படவில்லை.
மாயமான அந்த விமானத்தை விமானிகள் பத்சாரா, நந்தா ஆகியோர் இயக்கி உள்ளனர். அவர்களுக்கு வழிகாட்டியாக விமானி குணால், விமான பொறியாளர் ராஜன் மற்றும் 2 விமான ஊழியர்கள் இருந்தனர்.
தமிழக கடற்படை வீரர்
அந்தமான் தலைநகர் போர்ட் பிளேரில் உள்ள பழுதான கப்பல்களை சரிசெய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்ட ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கப்பல் படை ஊழியர்கள் சாம்பமூர்த்தி, பிரசாத் பாபு, நாகேந்திர ராவ், சேனாபதி, பூபேந்திர சிங், மகாரானா, சின்னாராவ், சீனிவாச ராவ் ஆகிய 8 பேர் அந்த விமானத்தில் பயணம் செய்தது தெரியவந்துள்ளது. மாயமான ராணுவ விமானத்தில் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி அருகே உள்ள செம்பூர் கிராமத்தை சேர்ந்த கடற்படை வீரர் முத்துக்கிருஷ்ணனும் (வயது 37) இருந்தார். அவருடைய கதி என்ன ஆனது என்று தெரியவில்லை.
மாயமான விமானத்தின் கடந்த கால டேட்டா
ரஷ்யாவில் அண்டோவ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஏ.என் 32 ரக விமானம் இரட்டை என்ஜீன்களை கொண்டது. 24 மீட்டர் நீளமும், சுமார் 30 மீட்டர் இறக்கைககொண்டது.
16 ஆயிரத்து 800 கிலோ எடை கொண்ட இந்த விமானத்தில் மொத்தம் 42 பேர் பயணிக்கலாம். 6.7 டன் சரக்குகளை கொண்டு செல்லும் திறன் கொண்டது. மணிக்கு 570 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் திறன் கொண்ட இதில் ஒரு முறை எரிபொருள் நிரப்பினால் 4 மணி நேரம் தொடர்ந்து பறக்க முடியும்.
இந்த விமானம் மேலெழும்ப குறைந்த தொலைவு கொண்ட ஓடுதளமே போதுமானது. இதற்கு முன் 3 முறை இந்த விமானத்தில் சிறிய அளவிலான கோளாறுகள் ஏற்பட்டு, பின்னர் சரி செய்யப்பட்டுள்ளதும் தற்போது தெரியவந்துள்ளது.
மாயமான விமானத்தை தேடும் பணி முழுவீச்சில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.