Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 4, 2016

பரமக்குடியில் பள்ளிக்கு செல்லாமல் போதைக்கு அடிமையாகும் மாணவர்கள்


பரமக்குடியில் மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் டிமிக்கி கொடுத்து விட்டு, போதைக்கு அடிமையாகும் நிலை அதிகரித்துள்ளது. பரமக்குடி ரயில் நிலையத்தில் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் ரயில் வரும் நேரங்களில் மட்டுமே அதிகளவில் பயணிகளின் கூட்டம் இருக்கும். மற்ற நேரங்களில் ரயில்வே ஊழியர்களை தவிர யாரும் இருப்பதில்லை. இதனை சாதகமாக பயன்படுத்தி கொள்ளும் சிலர் காலை நேரம் என்று கூட பார்க்காமல் பயணிகள் ஏறி செல்லும் படிக்கட்டுகளில் மதுகுடித்து வருகின்றனர். இதுபோல் ரயில் நிலையத்தின் இரண்டு பக்கங்களிலும் பயணிகள் நடமாட்டம் இல்லாததால், கஞ்சா மற்றும் போதை பொருள்கள் விற்பனை ஜோராக நடந்து வருகிறது. இந்நிலையில் பரமக்குடியில் உள்ள மேல்நிலை பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் பள்ளி சீருடையில் தினமும் ரயில் நிலையத்தில் தஞ்சமடைந்து வருகின்றனர். அப்படி வரும் சில மாணவர்கள் கஞ்சா மற்றும் மதுவுக்கு அடிமையாகி வருகின்றனர்.

பகல் 12 மணிக்கு மேல் நடைபாதையின் மேம்பாலத்தில் சர்வ சாதாரணமாக அமர்ந்து மதுகுடித்து வருகின்றனர். தட்டி கேட்கும் ரயில்வே அலுவலர்களை மரியாதை இல்லாமல் அவர்கள் பேசுகின்றனர். தினமும் காலையில் பள்ளிக்கு செல்லாமல் புத்தகத்துடன் வரும் மாணவர்கள், பழைய ரயில்வே ஸ்டேசன் கட்டிடம் இடிக்கப்பட்டுள்ள இடங்களில் அமர்கின்றனர். அவர்களிடம் சில நேரங்களில் பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறி கஞ்சா விற்பனை செய்யவும் பயன்படுத்தி வருகின்றனர். மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை என்றால், பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டியது பள்ளி நிர்வாகத்தின் கடமை. ஆனால் அவர்கள் கவனக்குறைவாக உள்ளதால் மாணவர்கள் போதைக்கு அடிமையாகி வருகின்றனர். அதைபோல் ரயில்வே நிர்வாகம் பயணிகளை தவிர மற்றவர்களின் நடமாட்டம் குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க முன் வரவேண்டும்.

பள்ளி மாணவர்கள் பற்றிய விபரங்களை காவல் துறைக்கு தெரியபடுத்த வேண்டும். இதன் மூலம் சமூக விரோதிகளாக மாறி வரும் பள்ளி மாணவர்களை தடுக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சட்ட உரிமைகள் கழக தலைவர் செந்தில் செல்வானந்த் கூறுகையில், பரமக்குடி ரயில் நிலையத்தில், ரயில் வரும் நேரத்தை தவிர மற்ற நேரங்களில் சமூக விரோதிகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. பள்ளிக்கு செல்லாமல் ‘கட்’ அடித்து விட்டு வரும் மாணவர்களை பயன்படுத்தி கஞ்சா விற்பனை செய்வது உள்ளிட்ட செயல் அதிகரித்து வருகிறது. மாணவர்களுக்கு பலர் கஞ்சா, மதுவை கொடுத்து அடிமையாக்கி வருகின்றனர். மாணவர்களின் நலனில் அக்கறை செலுத்தும் விதமாக போலீசார் பகல் நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபடவேண்டும் என கூறினார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.