Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 18, 2016

பெண்களின் நோய் தீர்க்கும் அர்த்த சர்வாங்காசனம்


செய்முறை :

விரிப்பின் மேல் நோக்கியவாறு (மல்லாந்து) படுத்து கை, கால்களைத் தளர்ந்த நிலையில் வைக்கவும், பின் கால்களை முட்டிவரை மடக்கி, இடுப்பை உயரத்தூக்கி (மேல்நோக்கி) கைகளால் இடுப்பைத் தாங்கி பிடித்து கொள்ளவும். இரு முட்டிக் கால்களை நெற்றியருகே இருக்கும்படி கொண்டு வரவும். பாதங்கள் மேல் நோக்கி இருக்க வேண்டும்.

பயன்கள் :

கர்பப்பையில் ஏற்படும் சிறு சிறு ரத்தக்கட்டிகள் மறையும். நச்சு இரத்தம் தேங்கிவிடாமல் வெளியேறும். மாதவிடாய் காலங்களில் ஏற்படும் சூதகவலி ஏற்படாதிருக்கும். அதிக உதிரப்போக்கு, உண்டாகாமலும், காலந்தவறாத மாதவிடாய் ஏற்படும். அனைத்து குடல் உபாதைகள் நீங்குவதோடு, குடலிறக்க நோயும் வராதிருக்கும். இது பெண்களுக்குரிய முக்கியமான ஆசனமாகும்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.