பிரபல டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா, அடிக்கடி ஏதாவது கருத்து சொல்லி சர்ச்சையில் சிக்கிக் கொள்வார். ஆனால் கடந்த ஒரு வருடமாக அமைதியாகவே இருந்து வந்தார்.
‘Ace Against Odds’ என்ற சானியாவின் சுய சரிதை புத்தகம் அண்மையில் வெளியிடப்பட்டது. இது குறித்து பிரபல ஆங்கில தொலைக்காட்சியின் லைவ் நிகழ்ச்சியில் பங்கேற்றார் சானியா. இந்த நிகழ்ச்சிக்கு, பிரபல தொகுப்பாளர் ராஜ்தீப் சர்தேசாய் நெறியாளராக செயல்பட்டார். நிகழ்ச்சியின்போது எடுத்தவுடனேயே ஒரு கேள்வியை கையில் எடுத்த ராஜ்தீப், சானியா அளித்த பதிலால் மன்னிப்பு கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
" என்ன சானியா ஓய்வு பெறும் எண்ணம் எதுவும் இல்லையா... குழந்தை எப்போது பெற்றுக் கொள்ளப் போகிறீர்கள்.... எப்போது ஒரு குடும்பத்தை உருவாக்கப் போகிறீர்கள்... செட்டில் ஆவது எங்கே... துபாயா அல்லது அபுதாபியா...?" என்கிற தொனியில் கேள்விகளை அடுக்கினார்.
இந்த கேள்வியால் அதிர்ச்சியடைந்த சானியா, ''இப்போது இரட்டையர் தரவரிசையில் நான் முதலிடத்தில் இருக்கிறேன். இந்த சமயத்தில் நீங்கள் கேட்ட இந்த கேள்வி என்னை மிகுந்த வருத்தத்தை தருகிறது எங்கே போனாலும் ஒரு பெண்ணாக இதே கேள்வியை நான் எதிர்கொள்கிறேன். நான் மட்டுமல்ல இந்த சமூகத்தில் உள்ள அனைத்து பெண்களுமே இதே போன்ற கேள்விகளையே எதிர்நோக்கிக் கொண்டுதான் இருக்கிறோம்.
பெண்கள் என்றால் முதலில் திருமணம். அப்புறம் குழந்தை பெற்றுக் கொள்வது மட்டுமேதான் விஷயமா..? எங்களுக்கென்று எந்த லட்சியமும் இருக்கக் கூடாதா. விம்பிள்டனை இப்போதுதான் வென்றிருக்கிறேன். அதை செட்டில் ஆனதாக எடுத்துக் கொள்ள மாட்டீர்களா. உலகின் நம்பர் ஒன் இடத்தில் இருந்து உங்கள் முன் நின்று கொண்டிருக்கிறேன் . அது செட்டில் ஆனதற்கு அர்த்தம் இல்லையா...?" என நெத்தியடியாக பதில் அளித்தார்.
சானியாவின் பதிலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சர்தேசாய், உடனடியாக லைவ் நிகழ்ச்சியிலேயே மன்னிப்புக் கேட்டார். அப்போது சர்தேசாய், ''இப்படி ஒரு கேள்வி கேட்டதற்காக நான் கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும். மிகவும் மேசமான ஒரு கேள்வியை உங்கள் முன் வைத்துள்ளேன். மனித்துக்கொள்ளுங்கள். இனிமேல் எந்த வீராங்கனையிடமும் இப்படி ஒரு கேள்வியை முன் வைக்க மாட்டேன் '' எனக் கூறினார்.
லைவ் நிகழ்ச்சியிலேயே ராஜ்தீப் சர்தேசாய் இப்படி சானியாவிடம் மன்னிப்புக் கேட்டது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.