Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 16, 2016

ராக்கிங்: சேலம் கல்லூரி மாணவர் தற்கொலை முயற்சி!


சேலம் மாவட்டம், உடையாப்பட்டி அருகில் உள்ளது வைஷியா ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் கல்லூரி. இக்கல்லூரியின் முதலாம் ஆண்டு பி.காம் மாணவர் கோகுல்ராஜ், கல்லூரி விடுதியில் தங்கி உள்ளார். அக்கல்லூரி விடுதியில் சீனியர் மாணவர்கள் இரவு முழுவதும் ராக்கிங் செய்ததால் ஏற்பட்ட மன உளைச்சலால் கல்லூரியின் 2வது மாடியில் இருந்து கீழே விழுந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 

இதுப்பற்றி கோகுல்ராஜின் பெரியப்பா ரவி, ‘‘நாங்க தர்மபுரி, காரியமங்கலம் தாலுக்கா, பொம்மள்ளியை சேர்ந்தவர்கள். எங்க தம்பி பெயர் சிவலிங்கம் அவரது மனைவி பெயர் கவிதா. அவர்களுக்கு கோகுல்ராஜ், மோனிஷா என்ற இரண்டு பிள்ளைகள். கோகுல்ராஜ் போன வருடம் பொம்மள்ளியில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் பிளஸ் டூ முடித்தான்.


மேற்படிப்புக்காக சேலம் வைஷியா கல்லூரியில் பி.காம்., சேர்த்தோம். அக்கல்லூரியிலேயே உள்ள விடுதியில் தங்கி படித்து வந்தான். அக்கல்லூரியில் பயிலும் சீனியர்களான பாலாஜி, அலெக்சாண்டர், பூபதி, கரண் ஆகியோரும் கல்லூரி விடுதியில் தங்கி இருந்தார்கள். தொடர்ந்து 10 நாட்களாக கோகுல்ராஜை அவர்களது ரூமிற்கு வரச்சொல்லி ராக்கிங் செய்திருக்கிறார்கள்.


எங்க பையன் கோகுல்ராஜூக்கு எந்த கெட்டப்பழக்கமும் இல்லை. ஆனால் அவர்கள் டிரிங்ஸ் குடிக்கச் சொல்லியும், கிரிக்கெட் பேட் வாங்க பணம் கேட்டும் மிரட்டி இருக்கிறார்கள். இதையெல்லாம் என் தம்பி சிவலிங்கத்திடம் ஆரம்பத்தில் சொல்லி இருக்கிறான். 'முதலாம் ஆண்டு என்றால் அப்படிதான் இருக்கும்...  அனுசரித்து போ... ' என்று சொல்லிவிட்டு, அசால்ட்டாக இருந்திருக்கிறார்.




நேற்றைக்கு முன்தினம் இரவு அந்த 4 பேரும் கோகுல்ராஜை ரூம்மிற்கு வரச்சொல்லி பேண்ட்டை கழற்றச் சொல்லி ஜட்டியோடு ஆடச் சொல்லி இருக்கிறார்கள். கோகுல்ராஜ் ஜட்டியோடு ஆடுவதை அவர்கள் மொபைலில் வீடியோ எடுத்து சிரித்து மகிழ்ந்திருக்கிறார்கள். இதையெல்லாம் கோகுல்ராஜ், கல்லூரி விடுதி வார்டன் கிருஷ்ணமூர்த்தியிடமும் சொல்லி இருக்கிறான். ஆனால் வார்டனும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்திருக்கிறார். இதனால் கோகுல்ராஜூக்கு மன அளவில் பாதிப்பு ஏற்பட்டதால், கல்லூரியில் உள்ள இரண்டாவது மாடியில் இருந்து கீழே  குதித்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.


2வது மாடியில் இருந்து கீழே விழுந்ததால் முதுகுத்தண்டில் பலத்த அடிபட்டிருக்கிறது. கால் முறிவு ஏற்பட்டுள்ளது. சிறுநீர் வரவில்லை. கல்லூரி நிர்வாகம் சேலம் கோகுலம் மருத்துவமனையில் சேர்த்து விட்டு, எங்களுக்கு போன் பண்ணி சொன்னதோடு சரி. 'என்ன நடந்தது... பையன் எப்படி இருக்கிறான்' என்று கூட இதுவரை கேட்கவில்லை.


நாங்கள் கோகுலத்தில் முதலுதவி செய்து கொண்டு, கோவை கங்கா மருத்துவமனைக்கு வந்து விட்டோம். நல்ல கல்லூரி என்று நினைத்து சேர்த்தோம். இப்படி நடக்கும் என்று தெரியாது. இதுவரை கல்லூரி தரப்பில் இருந்து யாரும் எங்களிடம் எதுவும் விசாரிக்கவில்லை என்றால், அது எப்படிப்பட்ட கல்லூரியாக இருக்கும் என்பதை நீங்களே சொல்லுங்கள்’’ என்றார்.


இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்

'வாஜ்பாய் செய்ததை, மோடி செய்வாரா?' -கேள்வி எழுப்பும் திருமாவளவன்
காஷ்மீர் பிரச்சினையை இப்படியான தாக்குதல்கள் மூலம் தீர்த்துவிட முடியாது. பகை நாட்டின் மீது படையெடுப்பு நடத்துவதுபோல, காஷ்மீர் மீது ராணுவத்தை ஏவுவது அந்த மக்களை மேலும் அந்நியப்படுத்துவதற்கும் பிரிவினைவாதிகளின் பிரசாரம் வலுப்பெறுவதற்குமே உதவும் kashmir riot, modi, vajpayee, vck thirumavalavanVCK Leader Thol. Thirumavalavan Slams Narendra Modi | 'வாஜ்பாய் செய்ததை, மோடி செய்வாரா?' -கேள்வி எழுப்பும் திருமாவளவன் - VIKATAN
இது சம்மந்தமாக சேலம் காவல்துறை விசாரணை செய்து, ராக்கிங்கில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பாலாஜி, அலெக்சாண்டர், பூபதி, கரண் மற்றும் விடுதி வார்டன் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை கைது செய்துள்ளது. 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.