Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 6, 2016

காதல் விவகாரம்; கல்லூரி மாணவன் வாயில் விஷம் ஊற்றி கொலை?


சேலம் அருகே சந்தேகத்தின் அடிப்படையில் இறந்து போன கல்லூரி மாணவன் ஜெயக்குமாரை அவர் காதலித்த பெண்ணின் வீட்டார் வாயில் விஷம் ஊற்றி கொன்றிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

சேலம், வாழப்பாடி அருகே பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார் ஜெயக்குமார். இவர் காதலித்து வந்த பெண்ணின் உறவினர்கள் கடந்த 3-ஆம் தேதி அழைத்து சென்றுள்ளனர்.

பின்னர் அரசியல் கட்சியை சேர்ந்த ஒருவரின் வீட்டுக்கு அழைத்து வந்தனர். அழைத்து வந்த சிறிது நேரத்திலேயே ஜெயக்குமார் மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பிரேதப்பரிசோதனைக்கு பின்னர் ஒப்படைக்கப்பட்ட மாணவன் ஜெயக்குமாரின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜெயக்குமாரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை சகாதேவன் புகார் அளித்துள்ளார்.

என்னுடைய மகன் ஒரு பெண்ணை காதலித்துவந்த பிரச்சனையில் அவனுக்கு வாயில் விஷம் ஊற்றியிருக்கலாம். இதனால்தான் அவர் இறந்திருக்கிறார். கொலை செய்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தவேண்டும் என அவர் காவல்துறையில் அளித்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.