சாமை அரிசி - 1/2 கப்
சிவப்பு அரிசி - 1/4 கப்
உளுந்து - 1/4 கப்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
கேரட் துருவல் - கால் கப்
வெங்காயம் - 1
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு
உ. பருப்பு - 1/4 டீஸ்பூன்
கடலைபருப்பு - 1/4 டீஸ்பூன்
செய்முறை :
* வெங்காயம், பச்சைமிளகாயை பொடியாக நறுக்கவும்.
* சிவப்பு அரிசி, சாமை அரிசி, வெந்தயம், உளுந்து ஆகியவற்றை நான்கு மணி நேரம் ஊற வைத்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
* பின்னர் அந்த மாவை உப்பு போட்டு கரைத்து எட்டு மணி நேரம் புளிக்க வைக்கவும்.
* வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம்பருப்பு, கடலைபருப்பு தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், கேரட் துருவலை போட்டு 2 நிமிடங்கள் வதக்கிய பின் இந்த கலவையை மாவில் சேர்த்துக் நன்றாக கலக்கவும்.
* குழிப்பணியாரச் சட்டியை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிது எண்ணெய் விட்டு மாவை பணியாரங்களாக ஊற்றி வேக வைத்து எடுக்கவும்.
* வெங்காயச் சட்னியுடன் பரிமாறவும்.
* சுவையான சத்தான சாமை கார குழிப்பணியாரம் ரெடி.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.