Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 18, 2016

சென்னை- கொச்சி ஆட்டம் சமன்: ரொனால்டினோ 5 கோல்கள் அடித்து கலக்கல்!


சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் புட்சால் கால்பந்து போட்டிகள் நடைபெற்றது. நேற்று நடந்த ஆட்டத்தில், கோவா அணியுடன் பெங்களூரு அணி மோதியது. இந்த போட்டியில் கோவாவின் நட்சத்திர வீரரும் பிரேசில் சூப்பர் ஸ்டாருமான ரொனால்டினோ 5 கோல்கள் அடித்து கலக்கினார். இதனால் இந்த ஆட்டத்தில் கோவா அணி 7-2 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

மற்றொரு ஆட்டத்தில் சென்னை அணி கொச்சி அணியுடன் மோதியது. இந்த ஆட்டத்தில் சென்னை அணி 4-2 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது. கடைசிக் கட்டத்தில் கொச்சி வீரர்கள் மோரவ்ஸ், சாகுன்ஹா தலா ஒரு கோல் அடித்தனர். இதனால் இந்த ஆட்டம் 4-4 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. இதுவரை சென்னை அணி ஒரு வெற்றியை கூட பெறவில்லை.

 அடுத்த சுற்று ஆட்டங்கள் மற்றும் அரையிறுதி ஆட்டங்கள் கோவாவில் நடைபெறுகிறது. இறுதி ஆட்டம் வருகின்ற 24-ம் தேதி கோவாவில் நடைபெறுகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.