Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 22, 2016

மிஸ்டர் வேர்ல்டு ஆனார் இந்தியர்!


இங்கிலாந்தில் நடைபெற்ற உலக அழகன் போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த ரோஹித் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

இங்கிலாந்தின் புளோரா ஹில் பகுதியில், சவுத்பார்ட் தியேட்டரில் 'மிஸ்டர் வேர்ல்டு' க்கான அழகன் போட்டி நடைபெற்றது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 47 வீரர்கள் இதில் பங்கேற்றனர். இதில் இருந்து, இந்தியரான ரோஹித் என்பவர் உலக அழகனாக தேர்வு செய்யப்பட்டார்.

ஆசியக் கண்டத்தைச் சேர்ந்த ஒருவர், இந்தப் பட்டத்தை வெல்வதும் இதுதான் முதன்முறை. ஹைதராபாத்தை சேர்ந்த ரோஹித், மாடல் ஆவார். தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வருகிறார்.

'ஸ்பைஸ் ஜெட்' நிறுவனத்தின் முன்னாள் ஊழியரான ரோஹித்துக்கு, வெற்றிப் பரிசாக 50 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.