உலகிலேயே மிக குறைவான விலைக்கு செல்போனை விற்பனை செய்வதாக கூறி, ரூ. 251 க்கு செல்போனை அறிமுகப்படுத்திய ரிங்கிங்பெல் நிறுவனம், தற்போது குறைந்த விலையில் எல்இடி டிவியை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன், 'ஃப்ரீடம் 251' என்ற பெயரில் ஸ்மார்ட் போனை டெல்லியை சேர்ந்த ரிங்கிங்பெல் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இதனை நம்பி லட்சக்கணக்கானோர் ஆன்லைனில் புக் செய்தனர்.
ஒரே நாளில் 7.5 கோடியை சம்பாதித்த அந்த நிறுவனத்தால், சொன்னது போல வாடிக்கையாளர்களுக்கு ஸ்மார்ட் போன்களை வழங்க இயலவில்லை. தற்போது, ஜூன் மாதம் 8ம் தேதிக்குள் அனைத்து வாடிக்கையளர்களுக்கும் ஸ்மார்ட் போன்களை வழங்கி விடுவதாக ரிங்கிங் பெல் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதற்கிடையே அதே ரிங்கிங்பெல் நிறுவனம், குறைந்த விலைக்கு எல்இடி டிவியை இன்று டெல்லியில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் பெயர் 'ஃப்ரீடம் ஹெச்டி எல்ஈடி டி.வி.' ஆகும். 32 இன்ச் கொண்ட இந்த டிவியின் விலை ரூ.9, 990 தான். சுமார் ஒரு லட்சம் டிவிகளை அது தயாரித்துள்ளதாம். அதுபோல் புதிய ரக ஸ்மார்ட் போன்களையும் ரிங்கிங்பெல் அறிமுப்படுத்துகிறது.
இது குறித்து ரிங்கிங்பெல் நிர்வாக இயக்குநர் மோகித் கோயல் கூறுகையில், " ஜூலை 25 ம் தேதி முதல் ஆன்லைனில் புக்கிங் தொடங்கும். ஆகஸ்ட் 1 ம் தேதி டெலிவரி செய்யப்படும்" என்றார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.