பெக்காம் போல, வளைந்து செல்லும் ஃப்ரீகிக் அடிக்க தெரியாமல் இருக்கலாம். மெஸ்சி போல லெப்ட் ஃபுட் ஸ்பெஷலிஸ்ட் இல்லைதான் . ரொனால்டோ போல புல்லட் வேக முட்டுக் கோலும் அடிக்கத் தெரியாது. எப்படியிருந்தாலும் இந்த வயதிலும் கால்பந்து விளையாடுவதற்கு தனித் திறமை வேண்டும்.
டெல்லி ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில், நேற்றிரவு கண்காட்சி கால்பந்துப் போட்டி நடந்தது. பிரதமர் நரேந்திர மோடியின் 'தூய்மை இந்தியா 'திட்டத்துக்கும், பெண் குழந்தைகள் நலனுக்கான 'பேட்டி பட்சாவோ' திட்டத்துக்கும் நிதி திரட்ட, இந்த போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. போட்டியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணியுடன் பாலிவுட் நடிகர்கள் அணி மோதியது.
போட்டியைத் தொடங்கி வைத்த வந்திருந்த பாபா ராம்தேவ் , வழக்கமான காவி உடையுடன் காலில் பூட்ஸ் அணிந்திருந்தார். அத்துடன் களத்தில் இறங்கியும் விளையாடி கலக்கினார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணியில், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பியுமான பிரசுன் பானர்ஜி, கனரகத் தொழில் துறை அமைச்சர் பாபுல் சுப்ரியா உள்ளிட்டவர்கள் இடம் பெற்றிருந்தனர்.
பாலிவுட் நட்சத்திரங்கள் அணியில் அபிஷேக் பச்சன், ரன்பீர் கபூர் உள்ளிட்டோர் இருந்தனர். இந்த கண்காட்சி போட்டியில் டிக்கெட் விற்பனை மூலம் கிடைத்த நிதி, பிரதமரின் 'தூய்மை இந்தியா' மற்றும் 'பேட்டி பச்சாவோ' திட்டங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.
போட்டியைத் தொடங்கி வைத்த ராம்தேவ், எந்த நிதியும் அளிக்கவில்லை. பதாஞ்சலி தயாரிப்பு எனர்ஜி பானங்களும் ஆயுர்வேத உணவு பண்டங்களும் வீரர்களுக்கு வழங்கப்பட்டன.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.