Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 27, 2016

உருளைக்கிழங்கு ரைஸ் பால்ஸ்


தேவையான பொருட்கள் :

மீதமுள்ள வெள்ளை சாதம் - 2 கப்
நடுத்தர உருளைக்கிழங்கு - 200 கிராம்
வெங்காயத்தாள் - 1 சிறிய கொத்து (4-5 தண்டுகள்)
பூண்டு - 4 பல்
பச்சை மிளகாய் - 2
எலுமிச்சை சாறு - 3 தேக்கரண்டி
காய்ந்த ஆரிகனோ (Oregano) - 1 தேக்கரண்டி
கொரகொரப்பான பொடித்த மிளகு - 1 தேக்கரண்டி
உப்பு
எண்ணெய் - பொரிக்க



செய்முறை :

* உருளைக்கிழங்கை நன்றாக வேகவைத்து தோலை நீக்கி மசித்து கொள்ளவும்.

* வெங்காயம், ப.மிளகாய், வெங்காயத்தாள், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் வடித்த சாதத்தை போட்டு நன்றாக மசித்து கொள்ளவும்.

* அதனுடன் மசித்த உருளைக்கிழங்கையும் போட்டு நன்றாக மசிக்கவும்,

* அடுத்து வெங்காயம், பூண்டு, ப.மிளகாய், எலுமிச்சை சாறு, மிளகு தூள், காய்ந்த ஆரிகனோ, உப்பு சேர்த்து நன்றாக பிசைத்து கொள்ளவும்.

* பிசைத்த கலவையை வேண்டிய வடிவில், வேண்டிய அளவில் உருட்டி வைக்கவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் உருட்டி வைத்துள்ள உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

* சுவையான உருளைக்கிழங்கு ரைஸ் பால்ஸ் ரெடி.

* இதை தக்காளி சாஸ் உடன் பரிமாறவும்.

குறிப்பு  :

* காலையில் செய்த சாதம் மீந்து விட்டால் மாலையில் இவ்வாறு ஸ்நாக்ஸாக செய்து கொடுக்கலாம். மிகவும் சுவையாக இருக்கும்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.