Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 15, 2016

மாலிக் கூறியதை வெளியே கூறினால் உயிருக்கு ஆபத்து : பீதியை கிளப்பும் உயர் அதிகாரி


சுவாதி கொலை வழக்கில், இன்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட, அவரின் நெருங்கிய தோழரான பிலால் கூறிய தகவல்கள் பற்றி உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.


சுவாதி கொலை செய்யப்பட்டவுடன், அவர் பிலால் என்ற வாலிபரால் வெட்டி கொலை செய்யப்பட்டார் என்ற தகவல் பரவியது  ஆனால், சுவாதியின் நெருங்கிய நண்பராகிய அவரிடம் போலீசார் இதுவரை பெரிதாக விசாரணை ஏதும் நடத்தவில்லை என்று குற்றச்சாட்டும் எழுந்தது.

சுவாதி வழக்கில், போலீசார் ராம்குமாரை கைது செய்வதற்கு உதவியாக இருந்தவர் பிலால் கொடுத்த முக்கிய தகவலும் ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது.

ராம்குமாரிடம் போலீசார் ஏற்கனவே விசாரணை செய்து வருகிறார்கள். அப்போது பிலால் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் முன்னுப் பின் முரணாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது. இதனால், பிலால் போலீசார் இன்று காலை சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக வரவழைத்தனர். அவர் தலையில் ஹெல்மெட்டுடன் காவல் நிலையத்திற்குள் நுழைந்தார். அங்கு அவரிடம் இரண்டு மணி நேரம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

அவரிடம் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தியிருக்கலாம் என கூறப்படுகிறது. ராம்குமார் பற்றி  பிலால் சுவாதி அனுப்பிய எஸ்.எம்.எஸ் பற்றி விரிவான விசாரணை நடத்தப்பட்டது என கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த விசாரணை குறித்து ஒரு உயர் போலீஸ் அதிகாரி கூறும்போது “ராம்குமார் பற்றி, பிலால் சில முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளார். அதன்படி, ராம்குமார்தான் சுவாதியை பின் தொடர்ந்து வந்துள்ளார் என்பது உறுதியாகி விட்டது. மேலும், இந்த வழக்கில் பிலால் முக்கிய சாட்சி என்பதால், அவர் கூறிய தகவல்களை வெளியே கூற முடியாது. அது அவரின் உயிருக்கு ஆபத்தாக முடியலாம். எனவே அவருக்கு உரிய போலீஸ் பாதுகப்பு வழங்கப்பட இருக்கிறது. வழக்கிற்கு முக்கியமான தகவல்களை பிலால் கூறியுள்ளார். அவை அனைத்தையும் நீதிமன்றத்தில் சமர்பிப்போம்” என்று கூறியுள்ளார்.

எல்லாம் சரி.. பிலால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் எனில், யாரால் ஏற்படும்? என்பது பீதியை கிளப்பும் கேள்வியாகவே இருக்கிறது. சுவாதி வழக்கில் ஏராளமான மர்மங்களும், கேள்விகளும், சந்தேகங்களும் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.