Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 18, 2016

'போக்கிமான் கோ'வால் திணறிய நியூயார்க்கின் சென்ட்ரல் பார்க்!




போக்கிமான் கோ கேம் விளையாட ஆயிரக்கணக்கான மக்கள்  நியூயார்க் சென்ட்ரல் பார்க்கில் ஒரே நேரத்தில் திரண்டதால்  அங்கு பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் போக்கிமான் கோ மொபைல் கேம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  இந்த கேமை கோடிக்கணக்கான  பேர் டவுண்லோட் செய்து விளையாடி வருகின்றனர். ஜி.பி.எஸ் வசதியுடன் விளையாடக் கூடிய கேம் இது. நிஜ உலகத்தோடு கனவுலகத்தை  இணைத்து  இந்த கேம் உருவாக்கப்பட்டுள்ளது.

மக்கள் தாங்கள் பார்க்கும் நிஜ உலகில் பல இடங்களுக்கு சென்று விளையாடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதுதான் இந்த கேமின் ஸ்பெஷாலிட்டி.

கடந்த ஜுலை 13-ம் தேதி நிலவரப்படி போக்கிமான் கோ கேமை 1.5 கோடி பேர் டவுண்ட்லோட் செய்துள்ளனர். இதனால் அதை உருவாக்கிய  போக்கிமான் கம்பெனியின்  தாய் நிறுவனமான நின்டென்டோவின்  பங்குகளின் விலை  50%க்கும் மேல் உயர்ந்துள்ளன.

நம் கண் முன் தோன்றும்  போக்கிமான்களை பந்தினை வைத்து எறிந்து  பிடிப்பதன் மூலம் பாயிண்ட்களை பெறும் வகையில் இந்த விளையட்டு உருவாக்கப்பட்டுள்ளது. போக்கிமான் கேரக்டர்களை பிடிப்பதற்கு வீட்டில் இருந்து வெளியே செல்ல வேண்டியது இருக்கும் என்பதால் கொஞ்சம் பிரச்னைதான். ஏற்கனவே அமெரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலிய நாடுகளில் மைதானங்கள், பூங்காக்கள், என எங்கு பார்த்தாலும் போக்கிமான் கோ கேம்தான்  ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், நேற்று நள்ளிரவு நியூயார்க் சென்ட்ல் பார்க்கில் ஆயிரக்கணக்கான மக்கள் போக்கிமான் கோ வெபோரியன் கேரக்டரை  பிடிக்கத் திரண்டனர். இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மக்கள் தங்கள் வாகனங்களை விட்டு விட்டு போக்கிமானை பிடிக்க ஓடினர். இதனால் அங்கு ஒரே கூச்சல் ஏற்பட்டது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.