Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 22, 2016

பியூஷ் ஜாமீனில் விடுதலை; சிறையில் தாக்கப்பட்டதாக பேட்டி!


சேலம் மாவட்டம் முள்ளுவாடி கேட்  பகுதியில் பாலம் கட்டும் பணிகளைத் தடுத்து ஆர்ப்பாட்டம் செய்ததாகக்  கைது செய்யப்பட்ட சூழலியல் செயற்பாட்டாளரும், சேலம் மக்கள் குழு ஒருங்கிணைப்பாளருமான  பியூஷ் மனுஷ் ஜாமீனில் இன்று(வியாழன்) விடுவிக்கப்பட்டார்.

சேலத்தில் மக்களிடம் முறையாக நோட்டீஸ் வழங்காமல் முள்ளுவாடி பகுதியில் பாலம் கட்டும் பணிகளை மேற்கொண்டதாகக் கூறி சேலம் மக்கள் குழுவினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து  ஆர்ப்பாட்டம் செய்தனர். இதையடுத்து இந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பியூஷ் மனுஷ் மற்றும்  கார்த்திக், முத்து ஆகியோரை கடந்த ஜூலை 8 ந்தேதி கைது செய்தார்கள் சேலம் போலீஸார்.

மற்றவர்களுக்குக் கடந்த ஜூலை 14 அன்று பிணை வழங்கப்பட்ட நிலையில் பியூஷிற்கு பிணை வழங்க காவல்துறை கடுமையான ஆட்சேபம் தெரிவித்ததால், பிணை மறுக்கப்பட்டுவிட்டது.



இதனிடையே நேற்று(புதன்) விசாரணைக்கு வந்த பியூஷ் மனுஷின் ஜாமீன் மனுவை விசாரித்த நீதிமன்றம்,  அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து சட்ட நடைமுறைகள் முடிந்து இன்று பிற்பகலில் அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். சேலம் மத்திய சிறையில் இருந்து அவரை நண்பர்கள் உறவினர்கள் மற்றும் சேலம் மக்கள் குழு உறுப்பினர்கள் வரவேற்று அழைத்துச் சென்றனர்.

அப்போது பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், "சிறைக்குள் 30 காவலர்கள் சேர்ந்து என்னை அடித்தார்கள். இந்திய சிறைகள் மீது நன்மதிப்பு இருந்தது. அது தகர்ந்துவிட்டது" என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.