தென் ஆப்ரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா கழுத்து வரை பட்டன் மாட்டிக் கொண்டுதான் காட்சியளிப்பார். தென் ஆப்ரிக்க மக்கள் மண்டேலாவை 'மடிபா 'என்று அன்புடன் அழைப்பார்கள். அதனால் அவர் அணியும் சட்டைக்கும் ' மடிபா சட்டை' என்று பெயர்.
தென் ஆப்ரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, ஜோகனஸ்பர்க்கில் இந்திய மக்களிடையே உரையாற்றிய போது நெல்சன் மண்டேலா போலவே மடிபா சட்டை அணிந்து உரையாற்றினார். அப்போது அவரது பேச்சை விட, மோடி அணிந்திருந்த சட்டை அனைவரையும் கவர்ந்தது.
உலகம் முழுக்க சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, அந்தந்த நாடுகளின் பாரம்பரிய உடை அணிந்து போஸ் கொடுப்பது வழக்கமானதுதான் என்றாலும் மடிபா சட்டை அணிந்தது வித்தியாசமாகவே இருந்தது.

இது போன்ற சட்டையை அணிந்ததற்காக மோடி விமர்சனங்களையும் சந்திக்காமல் இல்லை. ''ஜவுளித்துறை அமைச்சரின் சீர் திருத்தம் தொடங்கி விட்டது என ஸ்மிருதி இரானியை குறிப்பிட்டும் ''ராஜ்கபூரின் மேரா நாம் ஜோக்கர் ''எனவும் ட்விட்டரில் விமர்சித்துள்ளர்.
தென் ஆப்ரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு தான்சேனியா சென்ற மோடி, அந்த நாட்டு அதிபருடன் இணைந்து ட்ரம்ஸ் வாசித்தார். தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட 4 ஆப்ரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள, பிரதமர் மோடி, நாளை நாடு திரும்பவுள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.