Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 16, 2016

வேர்க்கடலை பர்ஃபி செய்வது எப்படி


தேவையான பொருட்கள் :

வறுத்த வேர்க்கடலை (தோல் நீக்கியது) - ஒரு கப்
பொடித்த வெல்லம் - அரை கப்
ஏலக்காய் தூள் - அரை தேக்கரண்டி
நெய் - 1 ஸ்பூன்

செய்முறை :

* வேர்க்கடலையை சுத்தம் செய்து வைக்கவும்.

* அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிது தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் வெல்லத்தூளை போட்டு கிளறி கொண்டே இருக்கவும்.

* வெல்லம் நன்றாக கரைந்ததும் அதை வடிகட்டி மற்றொரு பாத்திரத்தில் மாற்றி மீண்டும் கொதிக்க விடவும்.

* பாகு நல்ல பதம் வரும்வரை கொதிக்கவேண்டும். அதில் சிறிது ஏலக்காய் தூளை சேர்க்கவும். சிறிதளவு பாகை எடுத்து தண்ணீரில் விட்டு, அதை எடுத்து உருட்டி ஒரு தட்டில் போட்டால் சத்தம் வரவேண்டும். இது தான் சரியான பதம்.

* ஒரு தட்டில் நெய் தடவி வைக்கவும்.

* அந்த சமயத்தில் பாகை இறக்கி, வேர்க்கடலையைச் சேர்த்து நன்கு கிளறி, நெய் தடவிய தட்டில் கொட்டி, சமமாகப் பரப்பவும்..

* ஆறியதும் துண்டுகள் போடுங்கள். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.