Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 21, 2016

எளிமையான முறையில் அப்பளக் குழம்பு செய்து எப்படி


தேவையான பொருட்கள் :

புளி - நெல்லிக்காய் அளவு,
அப்பளம் - 5,
கடுகு - ஒரு டீஸ்பூன்,
வெந்தயம் - ஒரு டீஸ்பூன்,
கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - ஒன்று,
சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்,
மிளகாய் தூள் - அரை ஸ்பூன்
எண்ணெய் - 4 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 1

செய்முறை :

* தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* அப்பளத்தை துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

* புளியை நன்றாக கரைத்துகொள்ளவும்.

* ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் வெங்காயத்தை போட்டு நன்றாக வதங்கிய பின்னர் தக்காளியை போட்டு வதக்கவும்.

* தக்காளி நன்றாக வதங்கிய பின்னர் சாம்பார் பொடி, மிளகாய் தூள் சேர்த்து வதக்கிய பின் புளி கரைசலை ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்.



* நன்றாக கொதிக்கும் போது உப்பு சேர்க்கவும்.

* மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெந்தயம், காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு தாளித்த பின் வெட்டி வைத்துள்ள அப்பளத்தை போட்டு சிறிது வதக்கி கொதித்து கொண்டிருக்கும் குழம்பில் சேர்த்து 5 நிமிடம் அடுப்பை மிதமான தீயில் வைத்து இறக்கவும்

* சுவையான அப்பளக் குழம்பு ரெடி.

* குழம்பு வைக்க காய்கறிகள் இல்லாத நேரத்தில் இந்த அப்பளக் குழம்பு பெரிதும் உதவும். செய்வதும் சுலபமானது. 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.