Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 1, 2016

பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கூடாது: ஆந்திர முதல்வருக்கு ஜெயலலிதா கடிதம்


வேலூர் மாவட்டத்தில் புல்லூரில் பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்டும் பணியை உடனடியாக நிறுத்த நடவடிக்கை கோரி அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அருகில் தமிழக எல்லையில் புல்லூர் கிராமத்தில் பாலாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணையை ஆந்திர மாநில அரசு உயர்த்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இது தொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு கடிதம் எழுதியுள்ள முதல்வர் ஜெயலலிதா, "வேலூர் மாவட்டத்தில் புல்லூரில் பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணையின் உயரத்தை 5 அடியில் இருந்து 12 அடியாக ஆந்திர நீர்ப்பாசனத் துறை அதிகரித்து வருகிறது. இந்தச் செய்தியை தங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.

1892 மெட்ராஸ் - மைசூரு ஒப்பந்தத்தின்படி பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட அனுமதியில்லை.

இந்நிலையில், ஒப்பந்தத்தை மீறியும் ஆந்திர நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை உயரத்தை அதிகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆந்திர அரசால் தன்னிச்சையாக எடுக்கப்பட்ட இந்த முடிவை தமிழக அரசு வன்மையாக கண்டிக்கிறது.

மேலும், இவ்விவகாரத்தில் தாங்கள் தலையிட்டு தடுப்பணையின் உயரத்தை குறைக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.