Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 22, 2016

பெற்ற மகளையே ரூ.1 லட்சம் கொடுத்து கொன்றது அம்பலம் : தந்தை உள்பட 3 பேர் கைது


 நாமக்கல் பிளஸ் 1 மாணவி கொலை வழக்கில் அவரது தந்தை உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் அருகே உள்ள வேலக்கவுண்டன் பட்டியை சேர்ந்த செல்வம் - சுமதி தம்பதியினரின் மகள் காவ்யா கடந்த 15-ம் தேதி கழுத்து நெறிக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த வழக்கில் காவ்யாவின் தந்தை செல்வம், அத்தை வெண்ணிலா, மற்றும் சங்கர் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கருத்து வேறுபாடு காரணமாக செல்வமும், சுமதியும் பிரிந்து வாழ்கின்றனர். விவகாரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. குடும்ப பிரச்சினை காரணமாக பெற்ற தந்தையே ரூ.1 லட்சம் கொடுத்து மகளை கொலை செய்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.