சுவாதி எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்பது பற்றிய உறுதியான காரணங்கள் எதுவும் தெரி யாமல் இருந்தாலும், காதல் பிரச்சினையில்தான் அவர் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று அனைவரது வாயுமே முணுமுணுத்தது.
சுவாதி கொலைக்கு இப்போது அதுவே மூலக் காரணமாக இருப்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. கொலையாளி ராம்குமாரின் ஒருதலைக் காதலே சுவாதியின் உயிரை குடித்துள்ளது.
ஆலங்குளம் அருகே உள்ள கல்லூரியில் பி.இ. மெக்கானிக்கல் படிப்பை முடித்த ராம்குமார் சென்னை வந்து சுவாதியை விரட்டி விரட்டி காதலித்துள்ளான். நண்பர்களிடம் சென்னையில் வேலை செய்வதாக கூறிய ராம்குமார் காதலிப்பதை மட்டுமே வேலையாக கொண்டிருந்துள்ளான்.
இதனால் சுவாதி செல்லும் இடங்களுக்கெல்லாம் ராம்குமாரும் சென்றுள் ளான். பார்க்கும் போதெல்லாம் சுவாதியின் முன்னால் போய் நின்று கொண்டு தனது காதலை வெளி படுத்தியுள்ளான். ஆனால் சுவாதியோ ராம்குமாரின் காதலை ஏற்றுக் கொள்ள வில்லை.
இந்த நிராகரிப்பை ஏற்றுக்கொள்ள முடியாத ராம்குமார் தனக்கு கிடைக் காத சுவாதி யாருக்கும் கிடைக்க கூடாது என்கிற மனநிலைக்கு தள்ளப்பட் டுள்ளான். இதனாலேயே சுவாதியை துடிக்க துடிக்க ரெயில் நிலையத்தில் வைத்து மிகவும் தைரியமாக கொலை செய்து இருக்கிறான்.
ராம்குமார்தான் கொலை யாளி என்பதை அறிந்ததும் அவனது கல்லூரி நண்பர்கள் மற்றும் அந்த கல்லூரியில் படித்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஏனென்றால் ராம்குமார் அந்த கல்லூரியில் மிகவும் அமைதியான மாணவன் ஆவான். யாரிடமும் அதிகமாக பேசமாட்டான்.
இந்த நிலையில் அவனுக்கு நவீன செல்போன் மீதுஅதிக மோகம் ஏற்பட்டது. ஒருமுறை கல்லூரிக்கு கல்வி கட்டணம் செலுத்த அவனிடம் பெற் றோர் ரூ.40 ஆயிரம் பணம் கொடுத்தனர்.
ஆனால் அந்த பணத்தை கல்லூரியில் கட்டாமல் விலை உயர்ந்த செல்போன் வாங்கினான். கல்வி கட்டணம் செலுத்தாததால் கல்லூரி நிர்வாகத்தினர் ராம்குமாரின் பெற்றோரை கல்லூரிக்கு வரவழைத்து விசாரித்தனர்.அப்போதுதான் அவன் கல்லூரிக்கு செலுத்த கொடுத்த பணத்தை கொண்டு செல்போன் வாங் கியது தெரியவந்தது.
இதையடுத்து கல்லூரி நிர்வாகத்தினர் அவனை எச்சரித்து மீண்டும் கல்லூரியில் சேர்த்தனர். அதன் பிறகு அவன் நிறைய பாடங்களில் தோல்வி அடைந்தான்.
கடந்த 3 மாதத்துக்கு முன்பு அவன் சென்னை சூளைமேட்டில் உள்ள விடுதிக்கு வந்து தங்கினான். அப்போதுதான் சுவாதியை பின்தொடர தொடங்கினான். அவன் வேலைக்கு ஏதும் செல்லவில்லை. கல்லூரியில் அமைதி யாக இருந்தவன் கொலை காரனாக மாறியதை அறிந்து அவரது கல்லூரி நண்பர்கள் மற்றும் கல்லூரியில் படித்த வர்கள் அதிர்ச்சியில் உறைந் துள்ளனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.