Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 13, 2016

இறப்பு வீதத்தை அதிகரிக்கும் நிரம்பிய கொழுப்புக்கள்



உணவில் விலங்கு கொழுப்பிற்கு பதிலாக, திரவ தாவர எண்ணெய்களை பிரதியீடு செய்வது நீண்டகால வாழ்க்கைக்கு உகந்தது என தெரிய வருகிறது.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் நிரம்பிய கொழுப்புக்களின் கொள்வனவு அதிகளவில் இறப்புக்களுக்கு வழிவகுப்பது தெரியவந்துள்ளது.

இவ் ஆய்வு 126 233 பேரில், 3 தசாப்பங்களுக்கு மேலாக மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அதன்படி சிவப்பு இறைச்சி, வெண்ணெய், பன்றிக்கொழுப்பு, மற்றும் நிரம்பிய கொழுப்புக்களை, தாவர கொழுப்புக்களான ஆலிவ் எண்ணெய், கனோலா எண்ணெய், மற்றும் சோயா எண்ணெய் மூலம் பிரதியீடு செய்வதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை போண முடியும் என சொல்லப்படுகிறது.

ஆதேபோல் தாவர எண்ணெய்களிலிருந்து தயாரிக்கப்படும் டிரான்ஸ் கொழுப்புக்கள் பாரிய விளைவுகளை தோற்றுவிப்பதாக ஆய்வாளர் Dong Wang சொல்கிறார்.

ஆய்வின் போது டிரான்ஸ் கொழுப்புக்கள் 16 வீத மேலதிக இறப்புக்களுக்கு காரணமாக இருந்ததை அறிய முடிந்ததாக சொல்லப்படுகிறது.

இதை தவிர அதிகளவு நிரம்பிய கொழுப்புக்களின் ஊட்டலும் இறப்பு வீதத்தை அதிகரிப்பதாக சொல்லப்படுகிறது.

இது தொடர்பான முடிவுகள் JAMA Internal Medicine. எனும் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.