அமெரிக்காவில் கறுப்பினத்தவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பழிவாங்கும் விதமாக டல்லாஸ் நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 போலீசார் கொல்லப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் மின்சோட்டாவில் நேற்று முன்தினம் பிலாண்டோ காஸ்டி என்ற கறுப்பினத்தவர் ஒருவர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். பிலாண்டோ உடலில் இருந்து உயிர் பிரிந்த நேரத்தில் வீடியோ எடுத்து, அதை அவரின் தோழி ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். இது உலகம் முழுவதும் வைரலாகியது.

மறுதினமே லூசியானாவில் ஆன்டன் ஸ்டெர்லிங் என்ற கறுப்பினத்தவரை இரு வெள்ளை இன போலீசார் சுட்டுக் கொன்றனர். இந்த வீடியோவும் செல்போனில் படம் பிடித்து வெளியிடப்பட்டிருந்தது. தொடர்ச்சியாக நடந்த இந்த சம்பவங்கள் அமெரிக்காவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
கறுப்பினத்தவரை போலீசார் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நியூயார்க், சிகாகோ உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கறுப்பின மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். அதுபோல் டெக்சாஸ் மாகாணத்தின் டல்லாஸ் நகரில் ஆயிரக்கணக்கான கறுப்பின மக்கள் பங்கேற்ற ஊர்வலம் நேற்று நடந்தது.
போலீசை கண்டித்து நடந்த இந்த ஊர்வலத்தில் கறுப்பின மக்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்தக் கூட்டத்தில் இருந்த இருவர், எதிர்பாராதவிதமாக போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் சம்பவ இடத்திலேயே 4 போலீசார் பலியாகினர். மேலும்7 போலீசார் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அமெரிக்காவில் இந்த சம்பவத்தால் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.