'சதாசர்வகாலமும் உனக்கு ஆபீஸ் ஞாபகம்தான்...’ என்று வீட்டில் உள்ளவர்கள் சொன்னால், அலுவலக வேலையின் மீதான பற்றுதலும், வேலை செய்யும் இடத்தின் சந்தோஷமான சூழலும்தான் முக்கிய காரணங்கள்.
இன்று கணவன் / மனைவி இருவருமே வீட்டில் இருக்கும் நேரத்தைவிட அலுவலகத்தில் இருக்கும் நேரம்தான் அதிகம். ஒருநாளின் பெரும்பகுதியை செலவிடும் அலுவலகம் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறது என்பதை அறிந்துகொள்வோமா?
கொடுக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலை... மனதில் குறித்துக்கொள்ளுங்கள். மதிப்பெண்கள் கடைசியில்.
1. வேலை பார்க்கும் இடம், வேலை செய்ய போதுமான வசதிகொண்டதாக இருக்கிறதா?
அ. ஆம், போதுமான இட வசதியுடன் இருக்கிறது.
ஆ. ஓ.கே-தான், இருப்பினும் சற்றுப் பெரிதாக இருந்தால் நன்றாக இருக்கும்.
இ. இல்லை. மிகவும் குறுகலாக உள்ளது.
2. போதுமான வெளிச்சம் உள்ளதா?
அ. சரியான வெளிச்சத்துடன் உள்ளது.
ஆ. அதிக வெளிச்சம் இருக்கிறது.
இ. இருட்டாக உள்ளது.
3. வேலை செய்யும் இடம், தினசரி சுத்தம் செய்யப்படுகிறதா? குப்பைகள் தினமும் அகற்றப்படுகிறதா?
அ. ஆம், தினமும் அகற்றப்படுகிறது.
ஆ. வாரத்துக்கு ஒருமுறைதான்.
இ. சுத்தம் செய்வதே இல்லை.
4. கழிப்பறைகள் சுத்தமாக பயன்படுத்தும்படி உள்ளதா?
அ. மிகவும் சுத்தமாக இருக்கிறது, அவ்வப்போது, பராமரிக்கப் படுகிறது.
ஆ. ஓரளவுக்கு சுத்தமாக இருக்கும்.
இ. பெயரளவில் கழிப்பறை இருக்கும்.
5. ஓய்வு அறை அல்லது இடைவேளை நேரத்தில் உட்காருவதற்கு இடம் உள்ளதா?
அ. ஆம், ஓய்வு அறை இருக்கிறது. இது தவிர தனி அறைகளும் உள்ளன. தேவை எனில் படுத்து ஓய்வு எடுக்கலாம்.
ஆ. உணவு அருந்தும் இடத்தையே ஓய்வு அறையாகப் பயன்படுத்துவோம்.
இ. ஓய்வு எடுக்க எனத் தனி இடம் இல்லை.
6. விபத்து, உடல்நலக் குறைவு ஏற்பட்டால் முதல் உதவி வசதி உள்ளதா?
அ. உண்டு.
ஆ. முதல் உதவிப் பெட்டி உள்ளதா என்பதே தெரியாது.
இ. முதல் உதவிப் பெட்டி இல்லை.
7. உடற்பயிற்சிகள் ஊக்குவிக்கப்படுகின்றனவா?
அ. ஜிம் வசதி உண்டு அல்லது சலுகைக் கட்டணத்தில் ஜிம் வசதிக்கான வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
ஆ. அவ்வபோது உடற்பயிற்சி வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்யப்படும்.
இ. இல்லை.
(மதிப்பெண்கள் அ- 2, ஆ- 1, இ-0)
8. பின் வருபவனவற்றில் எவற்றை உங்கள் நிறுவனம் அளிக்கிறது?
அ. உடல்நலம் தொடர்பான நிகழ்ச்சிகள்.
ஆ. தனிநபர் மருத்துவப் பரிசோதனை.
இ. வேலை பார்க்கும் இடத்தில் மருத்துவ சேவை
ஈ. உடல் மற்றும் மன நலத்துக்கான நிகழ்ச்சிகள் ஏற்பாடு
உ. எதுவும் இல்லை
(ஒன்றுக்கு மேல் - 2, ஒன்று மட்டும் -1, எதுவும் இல்லை - 0)
11 மதிப்பெண்களுக்கு மேல்
உங்கள் பதில்கள் அடிப்படையில் நீங்கள் வேலைபார்க்கும் இடம் மிகவும் ஆரோக்கியமானதாக உள்ளது. பாதுகாப்பான மற்றும் வசதியாக வேலை பார்க்கும் சூழ்நிலை; உங்கள் உடல்நலத்தை மட்டுமல்ல... மனநலத்தையும் பாதுகாக்கும்.
10 மதிப்பெண்களுக்கு கீழ்
நீங்கள் வேலைசெய்யும் இடம் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை. குறைகள் பற்றி உங்கள் நிர்வாகத்திடம் பேசி சரிசெய்யப்பாருங்கள். வேலை செய்யும் இடம் ஆரோக்கியமானதாகவும், வசதியானதாகவும் இருக்கும்போதுதான் அதிக ஈடுபாட்டுடன் பணிகளைச் செய்ய முடியும்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.