Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 5, 2016

'இனி ஆசிரியர்களுக்கும் எக்ஸாம்... பாஸ் ஆகாவிட்டால் ஊதிய உயர்வு கட்!'


மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் சமீபத்தில் 2016 ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலான புதிய கல்வி கொள்கையை வெளியிட்டுள்ளது. அதில், ஒவ்வொரு ஆசிரியரின் தகுதி மற்றும் திறனை சோதிக்கும் வகையில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் சமீபத்தில் 2016 ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலான புதிய கல்வி கொள்கையை வெளியிட்டுள்ளது. அதில் மாணவர்கள் கல்வி திறனை வளர்க்க ஆசிரியர்களுக்கு ஏகப்பட்ட நிபந்தனைகள் விதித்துள்ளது.

இந்தியாவில் பள்ளி ஆசிரியர்களின் திறமையின்மையால், மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் மற்றும் திறன் குறைவாக இருக்கிறது. அனைத்து மாநிலங்களிலும் தகுதியும், திறமையும் உள்ள ஆசிரியர்களை தேர்வு செய்ய தனியாக ஆசிரியர் தேர்வு வாரியம் அமைக்க வேண்டும். தகுதி தேர்வின் அடிப்படையில்தான் புதிய ஆசிரியர்களை தேர்வு செய்ய வேண்டும்.  (தமிழகத்தில் ஏற்கனவே இந்த நடைமுறை இருக்கிறது). அனைத்து ஆசிரியர் கல்வி நிறுவனங்களும் இனி மத்திய அரசின் அங்கீகாரத்தை கண்டிப்பாக பெற வேண்டும்.



தேசிய அளவில் ஆசிரியர் கல்வியியலுக்கான பல்கலைக்கழகம் விரைவில் அமைக்கப்படும். ஒவ்வொரு ஆசிரியரின் தகுதி மற்றும் திறனை சோதிக்கும் வகையில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் திறன் தேர்வு நடத்தப்படும். இதில் ஆசிரியர்கள் கட்டாயம் பாஸ் செய்ய வேண்டும். திறன் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு மட்டுமே ஊதிய உயர்வு வழங்கப்படும். தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு 'கட்'.

ஒவ்வொரு மாநிலத்திற்கும் வெவ்வேறு பாடத்திட்டங்கள் இருப்பதால் தேசிய அளவில் மாணவர்களின் கல்வித்திறன் பாதிக்கப்படுகிறது. எனவே தேசிய அளவில் கணிதம், அறிவியல், ஆங்கிலம் என்று 3 பாடங்களுக்கு ஒரே மாதிரியான பாடத்திட்டம் வகுக்கப்படும். இந்த 3 பாடங்களை தவிர மொழிப்பாடம், சமூக அறிவியல், தொழில்கவ்வி பாடங்களை அந்தந்த மாநிலங்கள் முடிவு செய்து கொள்ளலாம். 6-ம் வகுப்பு முதல் கம்ப்யூட்டர் வழிக்கல்வி கட்டாயமாக்கப்படுகிறது. இது உள்பட பல்வேறு நிபந்தனைகளை விதித்து புதிய கல்வி கொள்கையை மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுவரை மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுதி வந்த நிலையில், இப்போது 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆசிரியர்களும் திறன் தேர்வு எழுத வேண்டும் என்பதால் வாங்க பாஸ் வாங்க நீங்களும் பரீட்சை எழுதுங்கள் என்று மாணவர்கள் இந்த அறிவிப்பை கண்டு குதுகலம் அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.