Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 23, 2016

சுகப்பிரசவத்திற்கான டிப்ஸ்!


தாய்மை பெண்களின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான, சந்தோசமான நிகழ்வு.
ஒவ்வொரு பெண்ணிற்கும் சுக பிரசவம் ஆக வேண்டும் என்பது தான் ஆசையாக இருக்கும்.ஆனால் இன்றைய கால கட்டத்தில், பெரும்பாலும் அறுவை சிகிச்சை மூலமே குழந்தை பிறக்கிறது.

இதற்கு மருத்துவமனை ஒரு காரணமாக இருந்தாலும், நாமும் ஒத்துழைக்க வேண்டும். கர்ப்பிணிகள் அனைவருக்கும் சுக பிரசவம் நடக்க சில எளிய குறிப்புகளை இங்கே காணலாம்.
தினமும் அதிக அளவு தண்ணீர் குடிக்கவும். அவ்வாறு அதிகமாக தண்ணீரை குடிப்பது கருப்பையில் நீரை தக்கவைத்து கொள்கிறது.
7 மாதத்திற்கு பிறகு நீண்ட நேரம் நிற்பதை தவிர்க்கவும்.
7 மாதத்திற்கு பிறகு பாலில் சில பூண்டுகளைப் போட்டு கொதிக்க வைத்து குடிக்கவும்.
காரமான உணவு உண்பது சுகப்பிரசவத்தை எளிதாக்குகிறது. ஆனால் இது போன்ற உணவை சாப்பிடுவதன் மூலம் குமட்டல் அல்லது நெஞ்செரிச்சல் ஏற்பட்டால் காரமான உணவை சாப்பிடும் முறையை தவிர்க்கவும்.
உங்களை எப்போதும் மனஅழுத்தமில்லாமல் சந்தோஷத்தோடு வைத்துக் கொள்ளவும். பிடித்த பாடல்களைக் கேட்கலாம்.
தினமும் காலையிலும் மாலையிலும் நடக்கவும். இவ்வாறு செய்வதால் உடல் சீரான நிலையுடனும் நெகிழும் தன்மையோடு மாறுவதால் சுகப் பிரசவம் எளிதாக இருக்கும்.
அன்னாசி, பப்பாளி, மாம்பழம் போன்ற பழங்களை சாப்பிட வேண்டும். இவற்றில் ப்ரோமிலெய்ன் அதிகமாக இருக்கிறது, இவை கருப்பை வாயில் ஏற்படும் பாதிப்பை நீக்கி மென்மையாக்குகிறது.
மாதுளை பழத்தை தினமும் சாப்பிடவும். இது உங்கள் உடம்பில் மற்றும் உங்கள் குழந்தையின் உடம்பில் உள்ள இரத்த அணுக்களை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் மாதுளத்தை சாப்பிடுவதால் உங்கள் குழந்தை சிவப்பாகவும் அழகாகவும் பிறக்கும்.
தினமும் தூங்கவதற்கு முன் இளஞ்சூடான நீரில் குளிக்கவும். இவ்வாறு குளிப்பதால் மனஅழுத்தம் மற்றும் உடல் சோர்வுகள் நீங்கும்.
தினமும் சில சிறிய உடற்பயிற்சிகளை செய்யவும். உடற்பயிற்சி செய்யாதவர்கள், தினமும் படிகட்டுகளில் அரை மணிநேரம் ஏறி இறங்கலாம்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.