காலையில் வேலைக்கு போய்- மாலையில் வீடு திரும்பி- இரவில் தூங்கும்.. இயல்பான வாழ்வியல் முறை, இருபத்தொன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே மலையேறிவிட்டது. இன்று பல லட்சம் இளம்வயதினருக்கு பணி வழங்கும் பன்னாட்டு மென்பொருள் நிறுவனங்கள், பி.பி.ஓ. என்றழைக்கப்படும் கால் சென்டர்கள் ஆகியவற்றில் ‘நைட் ஷிப்ட்’ எனப்படும் இரவுப்பணி கட்டாயமான ஒன்று.
எந்த நாட்டினருக்காக வேலை பார்க்கிறார்களோ, அந்த நாட்டினர் விழித்திருக்கும் நேரத்தில், இங்கு தூக்கத்தை தொலைத்துவிட்டு விழித்திருந்து அவர்களுக்காக வேலை பார்ப்பதுதான் இதன் நோக்கம். நம்நாட்டு காலநிலைப்படி இரவு நேரமானது, மேலைநாடுகளில் பகலாக இருப்பது இயற்கையின் விதி.
படித்தவர்களில் பலரும் இரவுப் பணி செய்துகொண்டிருக்கிறார்கள். கொட்டக்கொட்ட விழித்திருந்து வேலைபார்க்கிறார்கள். ஆனால் இரவுப்பணி, பலருக்கும் விருப்பமானதல்ல. காரணம் அதில் ஏகப்பட்ட இன்னல்கள் மண்டிக்கிடக்கிறது. உடல் உபாதைகள் தொடங்கி, பாதுகாப்பு குறைபாடுகள் வரை நீள்கின்றன பிரச்சினைகள். இதில் பல பிரச்சினைகள் பெண்களுக்கு ஆபத்துகளாக உருவெடுக்கின்றன.
பெங்களூருவில் செயல்படும் பி.பி.ஓ.வில் பணி புரிந்த பெண் ஒருவர், இரவில் கார் ஓட்டுனரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் பரவலாக அறியப்பட்ட செய்தி. தமிழகத்திலும் இத்தகைய அசம்பாவிதங்கள் நிகழ்ந்துள்ளன. பாலியல் பலாத்காரம் மட்டுமின்றி கொடூரமான கொலை சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. இரவுப் பணி செல்லும் பெண்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டியது மிக அவசியமாகிறது.
இயற்கை மனிதர்களுக்கு பல்வேறு நியதிகளை உருவாக்கியுள்ளது. அதில் முக்கியமான ஒன்று, இரவில் தூங்குவது. பகலில் வேலை பார்க்காவிட்டாலும் இரவில் தூங்கியாகவேண்டும். மனிதர்களுக்கு இது பொது வாழ்வியல் நியதி. ஆனால் இரவில் பணி என்று வருகிறபோது, விழித்திருத்தல் என்பது அவசியமாகிவிடும். நிறைவான தூக்கம் என்பது இரவில் மட்டுமே வசப்படும் ஒன்று. பகலில் சரியாக தூங்க முடியாது. பகலில் ஏதாவது இடையூறு ஏற்பட்டு, ஆழ்ந்த தூக்கம் தடைபட்டுக்கொண்டே இருக்கும்.
இரவில் தூங்க முடியாமல் போகும்போது உணவு பழக்கவழக்கத்தில் மாற்றம் ஏற்படும். சரியாக சாப்பிட முடியாது. தூக்கம்-உணவு இரண்டுமே வரைமுறையின்றி அமைவதால் உடல்பலவீனமாகும். நீண்டநேரம் விழித்திருக்க வேண்டி சிலர் டீ, காபி ஆகியவற்றை நாடுவார்கள். ஒரு சிலர் புகைபிடிக்க பழக்கிக்கொள்கிறார்கள்.
இன்னும் ஒரு படி மேலாக மன அழுத்தம் ஏற்பட்டு அடிக்கடி கோபம், சிடுசிடுப்பை வெளிப்படுத்தும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். மொத்தத்தில் இரவு பணி என்பது வேலையை பாரமாக பார்க்க வைத்து விடுகிறது. வேறுவேலைக்குச் சென்றால் தான் நிம்மதி என்று தோன்ற ஆரம்பித்துவிடும். விடுமுறை தினங் களையும் சரிவர அனுபவிக்க முடியாத சூழல் ஏற்படுகிறது. கடமைக்காக மட்டுமே வேலை செய்வது போல இயந்திரகதிக்கு மனநிலை ஆட்படுகிறது.
இதையெல்லாம் சகித்துக்கொண்டு வேலைக்குச் சென்றுவரும் இளம்பெண்களுக்கு வேறுசில இடை யூறுகளும் ஏற்படுகின்றன. அவை அவர்களின் உயிரையே பறிக்கும் வகையில் இருப்பது நெஞ்சை பதைபதைக்க செய்கிறது.
இரவு நேரத்தில் பணிக்குச் செல்லவோ அல்லது பணிமுடித்து வீடுதிரும்பவோ அந்தந்த நிறுவனங்கள் வாடகை வாகனங்களை ஏற்பாடு செய்துகொடுக்கின்றன. இதை பாதுகாப்பு என்று நினைக்கிறார்கள். இங்கு தான் பிரச்சினைகள் உருவாகின்றன. இந்த வாகனத்தில் தனியாக பயணிக்கும்போது பெண்கள் அசதியில் சிலசமயங்களில் தூங்கிவிடுகிறார்கள்.
அப்போது ஓட்டுனர்கள் போகும் பாதையை கவனிக்க முடிவதில்லை. அவர்கள் என்ன மனநிலையில் இருக் கிறார்கள் என்பதையும் கணிக்கமுடியவில்லை. தடம்மாற விரும்புகிறவர்கள், வழி மாறி போய்விடுகிறார்கள். ஆபத்தின் அருகில் சென்ற பின்புதான் அந்த பெண்ணுக்கு விழிப்பு ஏற்படுகிறது. விஷமமும் புரிகிறது.
சில நிறுவனங்கள் பாதுகாவலர் என்று ஒருவரை துணைக்கு அனுப்புகிறார்கள். அவர்களிடம் தற்காப்புக்காக ஒரு தடி கொடுக்கப்பட்டிருக்கும். அவரும் மனிதர்தானே! எந்த புற்றில் எந்த பாம்பு இருக்கிறது, எந்த பாம்பு எதனோடு சேருகிறது என்பதை எல்லாம் தூக்க கலக்கத்தில் இருக்கும் பெண்களால் புரிந்துகொள்ள முடிவதில்லை.
‘எப்போது வீடு போய் சேரலாம். அப்படியே படுக்கையில் விழலாம்’ என்ற மன நிலையிலும், உடல் தளர்ச்சியிலும் பெண்கள் இருப்பதால், பிரச்சினைக்குரியவர்களின் கைகளில் சிக்கும்போது எளிதாக பலியாடு ஆகிவிடுகிறார்கள்.
இரவுப் பணி பார்த்துவிட்டு வாடகை கார்களில் செல்லும் பெண்கள் கவனிக்கவேண்டியவை:
- ஓட்டுனரை பற்றிய முழு விவரங்களை தெரிந்துவைத்திருக்கவேண்டும்.
- காரில் ஏறி அமர்ந்த உடனேயே வீட்டிற்கு போன் செய்து கிளம்பிவிட்டதை தெரிவிக்க வேண்டும். அப்போதே கார் நம்பரையும், டிரைவர் பெயரையும் வீட்டில் இருப்பவர்களுக்கு தெரிவித்துவிடவேண்டும்.
- தான் தூக்க கலக்கத்தில் இல்லை, விழிப்பாகவே இருக்கிறேன் என்பதை டிரைவருக்கு உணர்த்திவிடவேண்டும். முடிந்த அளவு தூக்கத்தை கட்டுப்படுத்திக்கொண்டு, தன்னை சுற்றி நடப்பதை நோட்டமிட்டபடி இருக்கவேண்டும்.
- ஓட்டுனர் வழக்கத்துக்கு மாறாக புதிய வழியில் சென்றால் உடனடியாக காரணத்தை தெரிந்துகொள்ள வேண்டும். அப்படியும் சந்தேகம் இருந்தால் அலுவலகத்தை தொடர்புகொண்டு பாதை மாறி சென்று கொண்டிருப்பதை உணர்த்தவேண்டும்.
- ஓட்டுனரிடம் நட்போடு பேசுவதில் தப்பில்லை. ஆனால் அதிக நெருக்கம் காட்டுவது நல்லதல்ல. சகஜமாக பேசி, சொந்த விஷயங்களை பகிர்ந்து கொள்வது தேவையற்றது.
- அவசர உதவிக்கு போலீசை அழைப்பதற்கான எண் எப்போதும் பெண்களின் நினைவில் இருக்கவேண்டும்.
- வழியில் திடீரென்று கார் கோளாறு ஆகிவிட்டது என்று சொன்னால், உடனே உஷாராகி அலுவலகத்திற்கும், வீட்டிற்கும் டிரைவர் காதுபடவே தகவல் சொல்லவேண்டும். அந்த பகுதியில் உறவினர்கள் யாராவது இருந்தால் அவர்களை தொடர்புகொண்டு, அங்கு வரும்படி கூறலாம்.
- வழக்கமாக இறங்கும் இடத்தில் சாலை பணியோ, வேறு தடைகளோ இருந்தால் முதலிலே அது பற்றி தெரிந்துவைத்துக்கொள்ளுங்கள். அருகில் உள்ள வேறு இடத்தில் இறங்கவேண்டிய நிலை ஏற்பட்டால் முதலிலே வீட்டிற்கு தகவல் சொல்லி, யாரையாவது குறிப்பிட்ட நேரத்தில் அங்கு நிற்கவையுங்கள்.
- எந்த ஒரு அசம்பாவிதமும் திடீரென்று ஒரேநாளில் நடந்துவிடாது. முன்பின் ஏதாவது அறிகுறி தெரியும். அப்படிப்பட்ட அறிகுறிகளை அலட்சியமாக விட்டு விடாதீர்கள். சுற்றி இருப்பவர்களைப் பற்றி ஓரளவிற்காவது தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
- பயணத்தின்போது சுற்றுப்புறத்தை மறந்து போனில் துழாவிக்கொண்டிருக்காதீர்கள்.
- அலுவலகத்தில் வேலை செய்யும்போது கூடுமானவரை தனிமையில் இருக்காதீர்கள். உடன்பணியாற்றுபவர்களின் மனநிலையையும் புரிந்துகொள்ள வேண்டும். யார்மீதாவது சந்தேகமிருந்தால், நெருக்கமான தோழிகளிடம் அவரை பற்றி மனம்விட்டு பேசினால் தேவையான தகவல்கள் கிடைக்கும். சந்தேகம் விலகும்.
- யாராவது உங்களை உற்றுக் கவனிப்பதை உணர்ந்தால், அவரது நோக்கம் என்ன என்பதை புரிந்து அதற்கேற்ப எதிர்வினையாற்றுவது சிறந்தது.
- நைட் ஷிப்ட் அனுபவங்களை சீனியர்களிடம் கேட்டு தெரிந்துகொள்வது கூடுதல் தெளிவை கொடுக்கும்.
- எளிமையான தற்காப்பிற்கு எப்போதும் கைப்பையில் சிறிய ஆயுதம் ஏதாவது ஒன்றை வைத்துக்கொள்ளுங்கள்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.