Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 12, 2016

நெல்லையில் பட்டப்பகலில் கொடூரம் : ஓடும் பேருந்தில் அண்ணன், தம்பி வெட்டிக் கொலை


நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் ஓடும் பேருந்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் அண்ணன், தம்பி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். கொலை செய்யப்பட்ட மாரியப்பன், சுப்பிரமணி ஆகிய இருவரும் திருப்புடைமருதூரை சேர்ந்தவர்கள் ஆவர். சில மாதங்களுக்கு முன்பு கண்ணன் என்பவர் திருப்புடைமருதூரில் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் மாரியப்பன், சுப்பிரமணி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கொலை வழக்கு தொடர்பாக இருவரும் சேரன்மகாதேவி கோர்ட்டில் ஆஜராகிவிட்டு வீடு திரும்பிய போது கொல்லப்பட்டுள்ளனர். இதனால் கண்ணன் கொலைக்கு பழிக்கு பழியாக இருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

பட்டப்பகலில் கொலை நடந்துள்ளதால் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சமும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் கடந்த 10 நாட்களில் மட்டும் 15 கொலைகள் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கொலை முன்விரோதம் காரணமாக நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.