கடந்த சில வராங்களுக்கு முன்பு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஆர்ட் கேலரியுடன் இணைந்த வீடு மற்றும் இரண்டு கிடங்குகள் என மூன்று இடங்களில் இருந்து பழங்காலத்தைச் சேர்ந்த 71 கற்சிலைகள், 50 உலோகச் சிலைகள், 51 தேர் மரச் சிற்பங்கள், 42 பழமையான ஓவியங்கள் ஆகியவற்றைச் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் கைப்பற்றினர். இது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
சிலை கடத்தல் தொடர்பாகத் தேடப்பட்டு வந்த முக்கியக் குற்றவாளியான தீனதயாளன், தாமாகவே போலீஸில் சரணடைந்தார். அதைத் தொடர்ந்து அவரின் கூட்டாளியான லட்சுமிநாராயணனும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். லட்சுமிநாராயணனிடம் நடைபெற்ற விசாரணையில், மாமல்லபுரம் அருகே உள்ள கிராமத்தில் பங்களாவில் பழமையான சிலைகள் இருப்பதாகத் தெரியவந்தது.
மாமல்லபுரம் திருக்கழுக்குன்றம் சாலையில் உள்ள குச்சிக்காடு, ஒரேயொரு தெருவை மட்டுமே கொண்ட குக்கிராமம். அந்த சிறிய கிராமத்தில் லட்சுமிநாராயணனுக்குச் சொந்தமான மிகப் பெரிய பங்களா உள்ளது. உள்ளே என்ன நடக்கிறது என்று தெரியாத வகையில் மதில்சுவர், கிரில் கேட் என பலத்த பாதுகாப்போடு இருக்கிறது அந்த பங்களா. ஊரில் உள்ளவர்கள் யாருக்கும் அந்த பங்களாவில் என்ன நடக்கின்றது என்று தெரியாது.

பலகோடி மதிப்புள்ள அந்த பங்களாவை கடந்த வெள்ளிக்கிழமையன்று தமிழகச் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு துறையினர் சோதனையிடுவதற்காக வந்தனர். ஆனால் முறையாக நீதிமன்ற உத்தரவு பெறாததால் அன்று அவர்கள் சோதனையிட முடியவில்லை. ஆனால் வெள்ளிக்கிழமையே அந்தபங்களாவை தன் முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துவிட்டார்கள். பங்களா உள்ளேயும், வெளியேயும் யாரும் செல்ல முடியாதவாறு கதவை பூட்டி காவல் இருந்தனர். யாரும் உள்ளே நுழையமுடியாதவாறு காவல்துறையை சேர்ந்தவர்கள் ஒருவாரமாக இரவும் பகலுமாக பாதுகாப்பில் ஈடுபட்டுவந்தனர்.
காவல்காரர்கள், உறவினர் என எல்லோரும் வெளியேற்றப்பட்டனர். இந்த நிலையில் நேற்று அந்த பங்களாவை சோதனையிட நீதிமன்றத்திலிருந்து உத்தரவு பெற்றனர். தமிழகச் சிலைக் கடத்தல் பிரிவு ஆணையர் பொன்மாணிக்கவேல் தனது குழுவுடன் வந்தார். தொல்லியல் துறையில் கைதேர்ந்த நிபுணர்களும் உடன் வந்தனர். வெண்கலச் சிலைகள், ஐம்பொன்சிலைகள், பழமை வாய்ந்த கோவில் கதவுகள் என பழமை வாய்ந்த பொருட்கள் சிக்கின. சிக்கிய பொருளின் மதிப்பு பலகோடிகளைத் தாண்டும் என்கிறார்கள். இன்னும் மூன்று நாட்கள் சோதனையிட அந்த பங்களாவில் சோதனையிட முடிவு செய்துள்ளார்கள்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.