Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 12, 2016

டேஸ்டியான மட்டன் கீமா புலாவ்


தேவையான பொருட்கள் :

பாசுமதி அரிசி - 2 கப்
கொத்துக்கறி - 400 கிராம்
தயிர் - 1 கப்
ப.மிளகாய் - 5 (காரத்திற்கு ஏற்றபடி)
வெங்காயம் - 100 கிராம்
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு டேபிள் ஸ்பூன்
இலவங்கம் - ஐந்து
ஏலக்காய் - ஐந்து
மிளகு - அரை டீஸ்பூன்
பாதாம், பிஸ்தா, காய்ந்த திராட்சை - தேவைக்கு
குங்குமப்பூ - அரை டீஸ்பூன்
நெய் - 50 கிராம்
உப்பு - தேவைகேற்ப

செய்முறை :

* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* அரிசியை நன்றாக கழுவி வைக்கவும்.

* கொத்துக்கறியை நன்றாக கழுவி தண்ணீரை வடித்து வைக்கவும்.

* குக்கரை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் மிளகு, ஏலக்காய், லவங்கம் போட்டு தாளித்த பின் நறுக்கிய ப.மிளகாய், வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

* வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போன வதக்கியவுடன் தயிர், பாதாம், பிஸ்தா, கிஸ்மிஸ், குங்குமப்பூ சேர்த்து, 5 நிமிடம் வதக்கி பின்னர் சுத்தம் செய்த கீமாவை சேர்த்து வதக்கவும்.

* போதுமான உப்பு சேர்க்கவும். தேவையான தண்ணீர் ஊற்றி குக்கரில் கொத்துக்கறி சேர்த்து 5 விசில் வந்ததும் இறக்கி வைக்கவும்.

* ப்ரஷர் போனதும் திறந்து, பாசுமதி அரிசியை சேர்த்து நான்கு கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 3 விசில், 10  நிமிடம் மிதமான தீயில் வைத்து அடுப்பை அனைக்கவும்.

* ப்ரஷர் போனதும் மூடியை திறந்து, ஒரு கிளறு கிளறி மட்டன் கீமா புலாவை பரிமாறவும்.

* இதற்கு வெங்காய பச்சடியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.